Just relax

Just relax
Just Relax__keep deep breath..

போதையை துறந்தால் இளமையை தக்கவைக்கலாம்


போதையை துறந்தால் இளமையை தக்கவைக்கலாம்



 ஐம்பது வயதிற்கு மேல் ஆனாலும் ஆண்களில் சிலர் ஜம் மென்று அழகாக காட்சியளிப்பர். அதைப்பார்த்து பலரும் ஏக்கப் பெருமூச்சு விடுவதுண்டு. இளமையை தக்கவைத்துக்கொள்ள என்னதான் சாப்பிடுகிறாரோ? என்று நினைப்பதும் உண்டு. பெண்களுக்கு மட்டும் தான் அழகு குறிப்பா? எங்களுக்கெல்லாம் கிடையாதா என்று ஏங்கும் ஆண்களுக்கு இளமையை தக்கவைக்க எளிய டிப்ஸ். நமது வயதை முதலில் வெளிப்படுத்துவது சருமம் தான், அதனை ஒழுங்காக, சீராக பராமரித்தாலே நமது இளமை நீடித்திருக்கும். பெண்களின் சருமத்தை காட்டிலும் ஆண்களின் சருமம் 20 சதவிகிதம் கூடுதல் கடினத்தன்மையுடன் இருக்கும்



ஆயினும் வயது கூடும்போது கொல்லாஜன் எனும் புரதம் குறைவதால் சருமத்தில் சுருக்கம் ஏற்படுகிறது. உடல் கூறுவியலின்படி பெண்களை காட்டிலும் ஆண்களுக்கு முதிர்ச்சி சில காலத்திற்கு பிறகு தான் தோன்றும், ஆனால் ஒரு சில பழக்கவழக்கங்களினால் ஆண்களுக்கு இயல்பான வயதை காட்டிலும் முதுமையான தோற்றம் காணப்படுகிறது. ஆண்கள் அதிக அளவில் சூரிய வெளிச்சத்தில் பயணிப்பதாலும், மாசுள்ள காற்றை சுவாசிப்பதாலும் சருமம் பாதிக்கப்படுகிறது. எண்ணெய் அதிகமுள்ள உணவுகளை உட்கொள்வதாலும், சருமத்தில் முதுமை தோற்றம் தெரிகிறது. இதனை தடுக்க, முகத்தை பாதுகாக்கும் வகையில் தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தண்ணீர் மருத்துவம் இளமையை தக்கவைப்பதில் தண்ணீருக்கு முக்கிய பங்குண்டு. சருமத்தை மென்மையாக்குவதற்கும், பாதுகாப்பதற்கும் தினம் 6 டம்ளர் தண்ணீர் பருகுவது அவசியம் என்கின்றனர் அழகியல் நிபுணர்கள்

தொடர்ந்து ஷேவிங் செய்வதன் காரணமாக முகத்தில் முதிர்ச்சி தோன்றும், அதனால் ஈரப்பதத்துடன் கூடிய ஷேவிங் கிரீமை பயன்படுத்துவது நல்லது. மேலும் ஷேவிங் செய்யும்போது முடிகள் வளர்ந்திருக்கும் திசையில் ஷேவ் செய்து, வெதுவெதுப்பான தண்ணிரால் முகத்தை கழுவ வேண்டும். அவ்வாறு செய்தால் முகம் வாடாமல் புத்துணர்ச்சியுடன் தோன்றும். ஆன்டி ஆக்ஸிடென்ட் உணவுகள் ஆண்கள் என்றும் இளமையுடன் இருக்க தொடர்ந்த உடற்பயிற்சியும் பழங்கள், காய்கறிகள், பருப்பு வகைகள், உடலுக்கு குளிர்ச்சி தரும் இறைச்சிகள் மற்றும் மீன் போன்ற ஆரோக்கிய உணவுகளை உட்கொள்ள வேண்டும். உடல் திசுக்களை புதுப்பிக்கும் திறனுடைய ஆன்டிஆக்ஸிடன்ட் குணம் நிறைந்த உணவுகளை உட்கொள்வதால், முகம் சுருக்கம் இல்லாமலும் மென்மையாகவும் காணப்படும். மேலும் பசலை கீரை, அவுரிநெல்லிகள், கேரட், தக்காளி, பச்சை தேநீர் போன்றவற்றையும் சேர்த்துகொள்வது மிகவும் நல்லது. புகை, மது கூடாது சருமத்தை இளமையுடன் வைத்திருக்க மது மற்றும் புகைப்பிடித்தலை தவிர்க்கவும்.

சிகரெட்டுகளில் உள்ள நிக்கோட்டின் உடலின் இரத்த ஓட்டத்தை குறைப்பதால் சருமத்திற்கு தேவையான சத்துகள் கிடைக்காமல் சுருக்கம் ஏற்படுகிறது. இதனால் வயதான தோற்றம் எளிதில் வருகிறது. ஆழ்ந்த உறக்கம் சரியான உறக்கம் இல்லாமல் இருப்பதால் உடல்நிலை பாதிக்கப்படும் என்பதை அநேகமானோர் அறிவதில்லை. அது சோர்வையும், இளமையையும் பாதிக்கும். இரவில் குறைந்தது 6-7 மணி நேர ஆழ்ந்த உறக்கம் அவசியம் என்பதும் இதைத் தொடர்ந்து கடைபிடித்து வந்தால் மனதில் புத்துணர்ச்சி மட்டுமின்றி, உடல் ஆரோக்கியத்திலும், சருமத்திலும் பொலிவு ஏற்படும். மகிழ்ச்சியே இளமைக்கு வழி இது தவிர, உடல் ஆரோக்கியத்திற்கும், தாம்பத்ய உறவிற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. ஆரோக்கியமான உறவு இளமையை அதிகரிக்கும் என்றும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். அனைத்திற்கும் மேலாக, ஆண்கள் தனது கவலைகளை மறந்து மகிழ்ச்சியுடன் இருந்தாலே, முகத்தில் பொலிவும் இளமையும் கூடும். அப்புறம் பாருங்கள் நீங்களும் ஆணழகன் தான்.

Read more at: 
http://tamil.boldsky.com/beauty/skin-care/2012/anti-aging-tips-men-aid0174.html

No comments