Just relax

Just relax
Just Relax__keep deep breath..

நேரத்தை பயனுள்ள வகையில் செலவு செய்வது எப்படி

*நேரத்தை பயனுள்ள வகையில் செலவு செய்வது எப்படி ??*

19-ம் நூற்றாண்டில் வாழ்ந்த வில்பிரேடோ பரேட்டோ எனும் இத்தாலிய பொருளாதார நிபுணர் ஒருவர் அப்பொழுதே நேரத்தை எப்படி நேர்த்தியாக கையாள்வதென்று *80/20 என்னும் கோட்பாட்டின்* மூலம் விளக்கியுள்ளார். அவரின் அந்த கோட்பாட்டை வைத்து நாம் எப்படி நேரத்தை சிறந்த முறையில் கையாள்வதென்று பார்ப்போம்.



*80/20 கோட்பாடு என்றால் என்ன?*

ஒரு நாட்டின் 80 சதவீத நிலங்களை வெறும் 20 சதவீத மக்களுக்கு சொந்தமாக இருந்ததை பரேட்டோ கவனித்தார். இந்த ஏற்றத்தாழ்வை கவனித்த பரேட்டோ, இந்த கோட்பாட்டை மேலும் பல துறைகளின் மீது வைத்து ஆராய்ச்சி செய்ய துவங்கினார்.

பல ஆண்டுகள் கழித்து ஜோசப் ஜுரான் என்ற நபர் இதை வணிகத்திற்குப் பயன்படுத்தினர். உதாரணமாக, உற்பத்தியில் பெரும்பாலான குறைபாடுகள் அனைத்திற்கும் ஒரு சிறு சதவீத காரணங்களே விளைவு என்று ஜுரான் குறிப்பிடுகிறார். அதாவது ஒரு நிறுவனத்தின்
80% விற்பனை வெறும் 20% தயாரிப்புகளில் இருந்து வருவது போல80% வருவாய் வெறும் 20% வடிக்கையாளர்களிடமிருந்து வருவது போல.

*நேர நிர்வாகத்துக்கு எப்படி 80/20 கோட்பாட்டை பயன்படுத்துவது?*

நீங்கள் வேலையைத் தொடங்குவதற்கு முன், எப்போதும் உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள், *“இந்த பணி எனது முதல் 20% செயல்பாடுகளில் உள்ளதா அல்லது 80% கீழே உள்ளதா?”*

*20% உள்ள செயல்பாடுகளில் மட்டும் நேரத்தை செலவிடுங்கள்* 

 ஏனென்றால் அந்த 20% செயல்பாடு தான் 80% விரும்பத்தக்க விளைவுகளை கொடுக்கவல்லது.இதை செயல்படுத்த முதலில் உங்களின் செயல்பாடுகளை முக்கியத்துவம் சார்ந்து வகுத்துக்கொள்ளுங்கள். முதல் 10%, 20% மற்றும் கடைசி 80% என பிரித்துக் கொள்ளுங்கள். அந்த முதல் 10%, 20% மீதின் மட்டுமே உங்கள் கவனத்தை செலுத்துங்கள்.அந்த 20% செயல்பாடுகள் மீதமுள்ள 80% செயல்பாடுகளை விட அதிகமான விரும்பத்தக்க விளைவுகளை உங்களுக்கு தரும்.

உங்களுக்கு 80% கவனச்சிதறலை ஏற்படுத்துவது, உங்களின் 20% செயல்பாடுகள் தான். அதை கண்டறிந்து அந்த 20% செயல்பாடுகளை தவிர்க்கவும்.

*என்னால் எதை வேண்டுமானால் வாங்க முடியும் - நேரத்தை தவிர. அதனால் தான் நான் என் நேரத்தை மிகவும் கவனமாக கையாள்கிறேன் - வாரன் பபே ( உலகின் முதன்மை பணக்காரர்களில் ஒருவர்).*

No comments