மகிழ்வான வாழ்க்கை பயணம்
*மகிழ்வான வாழ்க்கை பயணம்*
*🌺ஒவ்வொன்றிற்கும் விளக்கம் தேவையில்லை*
மற்றவர்களுக்கு தேவையின்றி விளக்கமளிப்பதை நிறுத்துங்கள்! உங்களது நிஜமான நன்பர்களுக்கு உங்களது ‘விளக்கம்’ தேவைப்படாது! எதிரிகள் நீங்கள் என்ன சொன்னாலும் ‘நம்ப மாட்டார்கள்’! பின் ஏன் நேர விரயம்? மனசாட்சிப் படி செயல்படுங்கள், அது போதும்.
*பணத்தை விட அனுபவமே பெரியது*
செக்கு மாட்டு வேலை உதவாது. செய்தவற்றையே திரும்ப திரும்ப செய்து கொண்டிருந்தீர்களானால், இப்போது கிடைப்பது தான் திரும்ப திரும்ப கிடைக்கும். சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம், மற்றவற்றையும் செய்யுங்கள். பணத்திற்காக மட்டும் அல்ல! அனுபவத்திற்காகவும் கூட!
*சின்ன சின்ன சந்தோஷங்களை தவற விடாதீர்கள்*
வாழ்வின் “அற்புதகணங்களை” தவற விடாதீர்கள். வாழ்க்கையில், சந்தோஷமளிக்கும் விஷயங்கள் யாவும் பெரியதாகத்தான் இருக்க வேண்டும் என அவசியமில்லை! அழகை ரசியுங்கள்.
ஐந்து வருடத்திற்கு முன் எனது பேரன், வரைந்து வைத்த ஒரு சித்திரம்,
ஒரு பிச்சைக்காரன் தன்னிடம் இருக்கும் ஒரு ரொட்டியினை விண்டு, ஒரு தெரு நாய்க்கு போடும் ஒரு புகைப்படம்,
முன் பின் தெரியாத ஒருவருக்கு, அவசர நேரத்தில் செய்த உதவிக்காக, அவர் எழுதிய நன்றிக் கடிதம் ஆகியவை என்னிடம் உள்ளன! இவை தரும் சந்தோஷம் வேறு எதற்கும் குறைந்ததல்ல!
*Complete perfect?*
எல்லா நடைமுறைகளிலும், விடாப்பிடியான முழுமையாளியாக (Perfectionist) இருப்பது முடியாது, தவறு. வறட்டுத்தனமாக Perfection பார்ப்பவர்கள் வீட்டிலும், அலுவலகத்திலும் வெறுக்கத்தக்க மனிதராக இருப்பர். #மகரயாழ் குழந்தை 5.15-க்கு விளையாடப்போய், 6.15-க்கு படிக்கப் போய், 8.00க்கு சாப்பிட்டுவிட்டு 9.15-க்கு தூங்காவிட்டால் என்ன குடி முழுகிப் போச்சு? ஒரு அரைமணி நேரம் அதிகமாக விளையாடினாலோ, டி.வி பார்த்தாலோ கோபம் வேண்டாமே.
இரும்பு மனிதனை யாருக்குமே பிடிக்காது
எப்பொழும், இருப்பதிலியே மிக்ச் சுலுவான வழிகளைத் தேடிக் கொண்டிருக்காதீர்கள். கொஞ்சம் வேறுவகையாகத்தான் முயலுங்களேன்!
மற்றவர்களுக்காக உணர்ச்சிகளை மறைக்க வேண்டாம். வாய்விட்டு சிரிக்கத் தோன்றுகிறதா? சிரியுங்கள். அழவேண்டும் போல் உள்ளதா? அழுங்கள். எப்போதுபம் இரும்பு மனிதன் போர்வை போர்த்திக் கொண்டிருப்பது தப்பாட்டம்.
No comments