3D's Of Life
*3 D's Of Life
*
💚கணவன் மனைவி இருவரும் ஷாப்பிங் முடித்து, பெரிய ஓட்டலில் போய் சாப்பிட்ட பிறகு காருக்கு வந்தனர்.
💚அப்போது ஒரு வயதான அம்மாள் அவர்களிடம் கையேந்தியபடி வர, கணவன் அவளுக்கு பர்சிலிருந்து நூறு ரூபாய் எடுத்துக் கொடுத்தான். அவள் நிறைய நன்றி சொல்லிவிட்டு போனாள்.
💚மனைவி, எதற்கு நூறு ரூபாய்? கர்ணப் பரம்பரையோ? அஞ்சோ பத்தோ கிழவிக்குப் போட்டிருக்க கூடாதா? என்றாள்.
💚கணவன் சிரித்துக்கொண்டு சொன்னான், உனக்கு புடவை நகைகள் எனக்கு துணிகள் செருப்பு பசங்களுக்கு துணிகள் என்று கிட்டத்தட்ட சர்வ சாதாரணமாக லட்சத்தில் செலவு பண்ணினோம்.
💚ஆனால் அந்த வயசான அம்மா, வயித்துப் பசிக்கு சாப்பிட நம்மைத் தேடி வந்திருக்கா. நம்மாலே ரெண்டு நேரம் அந்தம்மா சாப்பிடும்போது நம்மை மனசார நினைக்குமே. அதனாலே நமக்கு புண்ணியம் கிடைக்க வேண்டாம். அந்தம்மாவோட பசி போகுது.
💚மனுஷனுக்கு மூன்று விஷயங்கள் எப்ப வரும்ன்னு தெரியாது. அது எப்ப வேணும்ன்னாலும் வரலாம்.
அது என்ன தெரியுமா?
💚Disability - இயலாமை
Disease. - நோய்
Death. - இறப்பு
💚நமக்கும் இந்த மூன்றும் எப்போது வேண்டுமானாலும் வரலாம். நம்மால் முடியும்போது, முடியாதவர்களுக்கு சிறு உதவி பண்றதாலே, கடவுள் நமக்கு அந்த மூன்றையும் தள்ளிப்போடலாம்" என்றான். மனைவி கண் கலங்கி நின்றாள்.
💚எனவே, மேலே சொன்ன 3 Ds நமக்கும் எப்போதும் வரலாம். அதுவரை நம்மால் முடிந்த நல்லதைச்
செய்வோம்.
💚நல்லதை பகிர்வோம்!
No comments