தத்துவம் of the day...
- போலியான புன்னகையை விட திமிரானக் கோபமே மேல்
- வானில் நீ உயர்ந்தாலும் வாழ்வதற்கு தரைக்கு தான் வரவேண்டும்
- வார்த்தையால் பேசுவதை விட வாழ்ந்து காட்டுவதே சிறப்பு
- தனியே நின்றாலும் தன்மானத்தோடு நிற்ப்பதில் தவறில்லை
- ஆயிரம் உறவுகள் தரமுடியாத பலத்தை ஒரு அவமானம் பெற்றுத் தரும்
- நோயும் கடனும் எதிர்பார்ப்பும் இல்லாதவனின் தூக்கம் மிகவும் சுகமானது
- அதிகமான ஆட்டம் குறுகிய காலமே என்று உணர்த்துகிறது சுற்றும் பம்பரம்
- சிரிப்பு இல்லாத வாழ்க்கை சிறகு இல்லாத பறவைக்கு சமம்
- இழப்புகள் தான் பல வலியையும் சில வலிமையையும் தருகின்றன
- தெளிவாக செய்யாத காரியங்கள் அனைத்தும் வலுவாக இருப்பதில்லை
- அன்பு செய்யும் ஒருவனால் தான் பிறருடைய அன்பை உணர முடியும்
- துனியாத வரை வாழ்க்கை பயங்காட்டும், துணிந்து பார் வாழ்க்கை வழி காட்டும்
- யாரையும் நம்பாதே.. இந்த உலகில் தேவை இல்லாமல் யாரும் பழகமாட்டார்கள்
- கண்டும் காணாமல் சென்று விடுங்கள் பார்த்தும் பார்க்காமல் செல்பவர்களை
- எதையும் விட்டு விடாதே கற்றுக் கொள்
- ஆசை இல்லா மனம் வேண்டும், நிம்மதியான வாழ்க்கை வாழ
- நம்மீது நம்பிக்கை நமக்கிருக்கும் வரை வாழ்க்கை நம்வசம்
- எப்போதும் தன்னம்பிக்கை மட்டும் இழக்கக்கூடாது
- நீ என்ன செய்தாலும் குற்றம் சொல்ல நாலு பேர் இருப்பான்
- நாளை விடிந்தால் நடக்கும் கதை யாருக்கும் தெரியாது
- வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல.. நீ மற்றவர்கள் மனதில் வாழும் வரை
- நேசிக்க யாருமில்லாத போது தான், யோசிக்க வைக்கிறது வாழ்க்கை
- அடுத்தவர்களுக்கு கெடுதல் நினைக்காத எல்லா நேரமும் நல்ல நேரமே
No comments