வாழ்க்கையில் மன நிறைவு அடைய
ஒரு பணக்கார தந்தையும் அவரது மகனும் ஒரு விலையுயர்ந்த வணிக வளாகத்திற்கு ஷாப்பிங் சென்றனர். அவர்கள் காரில் திரும்பி வரும் வழியில், ஒரு ஏழைப் பையன் அவர்களை நெருங்கினான்.
"தயவுசெய்து எனக்கு உதவுங்கள் ஐயா! இன்னும் உடுத்துவதற்கு என்னிடம் ஆடை இல்லை"
பணக்கார தந்தை அந்த ஏழை பையனை ஒரு பார்வையை வீசி கிழிந்த அவன் ஆடைகளை பார்த்து அவன் மீது இரக்கம் கொண்டார்.
"தம்பி உனக்கு என்ன வயசு?" என்று அவனிடம் கேட்டான்.
"எனக்கு பத்து வயது, ஐயா" என்றான்.
அப்போது பணக்கார தந்தை கூறினார்.
"சரி, என் மகனுக்கும் வயது பத்து, அவனுடைய புது ஆடைகள் உனக்குப் பொருந்தும் என்று நினைக்கிறேன்"
தந்தை தனது ஆடம்பரமான தோற்றமுடைய மகனின் பக்கம் திரும்பினார்.
"ஜெஃப், நாம் புதிதாக வாங்கிய ஆடைகள் சிலவற்றை இந்தப் பையனுக்கு கொடுத்துவிடு நாளை ஷாப்பிங் செய்ய வரலாம்"
சிறுவன் சம்மதிக்க
பணக்கார தந்தை அவர்களின் ஷாப்பிங் பையைத் திறந்து சில துணிகளை எடுத்து ஏழை பையனிடம் கொடுத்தார். அவன் முகம் உற்சாகத்தில் பிரகாசித்தது.
அப்போது தந்தை விசாரித்தார்.
"நீ எங்கு வசிக்கிறாய் என்பதை நான் அறியலாமா?"
ஏழைப் பையன் பதில் சொன்னான்.
"நான் பாலத்தின் கீழ், தெருவில் வசிக்கிறேன்"
ஆடைகள் தந்தமைக்காக அவர்களுக்கு நன்றி சொல்ல தந்தையும் அவரது மகனும் விடைபெற்று சென்றனர்
மூன்று மாதங்களுக்குப் பிறகு, பணக்கார தந்தை தெருவை ஓட்டி, பாலத்தின் கீழ் ஏழை பையனைத் தேடினார். அவனைக் கண்டதும், காருக்கு அழைத்துச் சென்று உடைகள், காலணிகள், பைகள் மற்றும் பொம்மைகள் அடங்கிய பெட்டிகளை அவனிடத்தில் தந்தார்
"அவை என் மகனின் உடைமைகள் ஆனால் அவை அனைத்தையும் இப்போது உனக்குத் தருகிறேன்"
ஏழைப் பையன் ஆச்சரியமடைந்தான், அழுகையை நிறுத்த முடியவில்லை. அவர் கூறினார்.
"ஆனால் உங்கள் மகனுக்குக இவை தேவையில்லையா?"
"இல்லை, ஏனென்றால் அவன் இப்போது சொர்க்கத்தில் இருக்கிறான். என் அன்பான பையன் சில வாரங்களுக்கு முன்பு புற்றுநோயால் இறந்துவிட்டான். அவன் புற்றுநோயுடன் மூன்று ஆண்டுகள் வாழ்ந்தான், அவன் இறக்கப் போகிறார் என்பதை நாங்கள் அறிந்திருந்தோம், எனவே அவன் வாழ்க்கையின் இறுதி நாட்களில் நுழைவதைப் பார்ப்பது உணர்ச்சி ரீதியாக மிகவும் கடினமாக இருந்தது. மரணப் படுக்கையில், ஜெஃப் என்னிடம் 'அப்பா நான் போனதும், மாலுக்கு வெளியே நாம் சந்தித்த ஏழைப் பையனுக்கு, என் உடைமைகள் அனைத்தையும் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டான்.
கண்களில் கண்ணீருடன் தந்தை ஒரு கணம் நிறுத்தினார், அவர் முடித்தார்.
"நீ ஏழையாக இருக்கலாம், ஆனால் பணத்தால் வாங்க முடியாத உயிரினை நீ பெற்றிருப்பது எவ்வளவு பாக்கியம் என்று உனக்குத் தெரியாது. முடிந்தால் என் மகனுக்கு நூறு உயிர்களை நான் வாங்கி இருப்பேன் , ஆனால் அவனுடைய எல்லாப் போராட்டங்கள் மற்றும் உடல் கஷ்டங்கள் பற்றி உனக்குத் தெரியாது வாழ்க்கை அப்படித்தான்.
நாம் அடிக்கடி நம் வாழ்க்கையை மற்றவர்களுடன் ஒப்பிடுகிறோம், பிறர் போல் வாழ்க்கை நமக்கு இல்லை என்று வேதனைப்படுகின்றோம், பிறரிடம் பொறாமைப்படுவதற்குப் பதிலாக, நமக்கு அமைந்த வாழ்க்கையில் மன நிறைவு அடைய வேண்டும்.
ஒருவர் கைரேகை போல் இன்னொருவருக்கு அமைவதில்லை. தூரத்தில் பிரகாசமாக ஏரியும் மெழுகுவர்த்தியை அருகில் சென்று பார்த்தால் தான் அது கண்ணீர் விட்டு உருகுவது நமக்குத் தெரியும்.
No comments