Just relax

Just relax
Just Relax__keep deep breath..

Best Posts

🦚🦜🦢🦉பறவைகளிடமிருந்து நாம் சில பாடங்களை படிப்போம்... 🦜

 🦚🦜🦢🦉பறவைகளிடமிருந்து நாம் சில பாடங்களை படிப்போம்... 🦜


1. இரவு நேரம் ஒன்றும் சாப்பிடுவதில்லை 🦜


2. இரவு நேரங்களில் ஊர் சுற்றுவதில்லை🦜


3. தன் பிள்ளைகளுக்கு தக்க சமயத்தில் வாழ்க்கைக்கான பயிற்சிகளை அளிக்கின்றன.🦜


4. மூக்குமுட்ட உண்ணுவதில்லை. எவ்வளவு தானியங்களை இட்டு  கொடுத்தாலும் தேவையானவற்றை மட்டும் கொத்திவிட்டு பறந்து செல்கின்றன. போகும் போது எதையும் எடுத்து போவதில்லை.🦜


5. இருள் சூழும்போதே உறங்க துவங்குகின்றன. அதிகாலை ஆனந்தமாய் பாட்டு பாடி எழுகின்றன.🦜


6. தனது ஆகாரத்தை அவை மாற்றுவதில்லை 🦜


7. தனது உடலில் வலுவுள்ளவரை உழைக்கின்றன. இரவு அல்லாது மற்ற நேரங்களில் ஓய்வு எடுப்பதில்லை.🦜


8. நோய் வந்தால் உண்ணுவதில்லை. சுகமான பின் உணவு எடுத்துக்கொள்கிறது.🦜


9. தன் குழந்தைகளுக்கு பரிபூரணமான அன்பை கொடுத்து வளர்க்கின்றன.🦜


10. கடுமையான உழைப்பாளிகளாயிருப்பதால், இதயம், கல்லீரல், நுரையீரல் நோய்களால் பாதிக்கப்படுவதில்லை.🦜


11. இயற்கைக்கு எதிராக ஒருபோதும் செயலாற்றுவதில்லை. தனது அத்தியாவசிய தேவைக்கு மட்டும் இயற்க்கையிலிருந்து பெற்று கொள்கின்றன.🦜


12. தனது கூடு மற்றும் சுற்று சூழல்களை அனுசரனையோடு பாதுகாக்கின்றன.🦜


13. ஒருபோதும் தனது மொழியினை மாற்றி வேற்று மொழி கலந்து பேசுவதில்லை.🦚


14.பறவைகள் கூடுதலாக கூடுகள் கட்டி வாடகைக்கு விடுவதில்லை.                                             

 

இதில் சில படிப்பினைகளையாவது நாம் பாடமாக எடுத்துக்கொண்டால் வாழ்வு சிறப்பது திண்ணம். 🦉🦜🦢.

No comments