Just relax

Just relax
Just Relax__keep deep breath..

மனைவியை நேசியுங்கள்!!

 மனைவியை நேசியுங்கள்!!


வாருங்கள் நேராக கதைக்கு செல்வோம்!!


இது உண்மை கதையென்று சொல்லமாட்டேன்!! ஆனால் இதை விட நிறைய உண்மை நிகழ்வுகள் நம்மை சுற்றி நடந்த வண்ணம் உள்ளன!!


ஒரு கிராமத்தில் ஒரு கொள்ளன் வசித்து வந்தான்!!


அன்பான மனைவி!


அழகான குழந்தை!


சிறிய வீடு


கடுமையான உழைப்பு!


நிறைவான வாழ்க்கை என்று வாழ்க்கை எளிமையாக மகிழ்ச்சியுடன் சென்றது!!



ஒரு சமயம் அவனின் வியாபாரம் நலிந்து !! பணம் இன்றி சாப்பாட்டிற்கு வழி இல்லாமல் கஷ்டப்பட ! கண் கலங்கிய நிலையில் ஒரு நாள் இரவு அவன் மனைவி! அவன் நிலை அறிந்து கவலை படாதீர்கள் இந்த வேலை இல்லை என்றால் என்ன பக்கத்து காட்டில் விறகு வெட்டி பிழைப்பு நடத்தலாம் ! என்று யோசனை சொல்ல!!


புதிய உத்வேகம் வந்தவனாய்!


மறுநாள் காலை காட்டிற்கு சென்று விறகு வெட்டி !! கிராமத்தில் விற்று பிழைப்பு நடத்த ஆரம்பித்தான்!!



வருமானம் குறைவு ஆனாலும்! அதே அன்பான மனைவி பாசமான குழந்தை என வாழ்க்கை ஓடியது!


தினமும் வீட்டில் சோளக்கஞ்சி, கொள்ளு துவையல் என வாழ்க்கை ஓடிக்கொண்டு இருக்க சற்றே கவலை கொண்டான் !!


மறுபடியும் இதனை அறிந்த அன்பு மனைவி என்னவாயிற்று என்று கேட்க !!


இல்லை முன்பு அரிசி சோறு , அசைவம் என்று சாப்பிட்டு கொண்டு இருந்தோம் இப்பொழுது உனக்கு வெறும் சோளக்கஞ்சி தான் என்னால் கொடுக்க முடிகிறது என்று சொல்ல !!


மனைவி கவலை படாதீர்கள் நீங்கள் விறகு வெட்டி வீட்டுக்கு கொடுத்த காசை சேர்த்து வைத்து இருக்கேன் !! நீங்கள் சிறியதாக ஒரு விறகு கடை நடத்துங்கள் என்று சொல்லி சேர்த்து வைத்திருந்த காசை அவன் வசம் கொடுத்தார்!!



மறுநாள் புது இரத்தம் பாய்ந்த வனாய் புதிய தொழில் விறகு வியாபாரம் செய்ய ஆரம்பித்தான், மனைவி கொடுத்த உற்சாகம் மிக விரைவில் வியாபாரம் வளர்ச்சி அடைய நிறைய பணம் சேர்த்தான்!!


இப்பொழுது அரிசி சோறு, அசைவம் , அன்பான மனைவி என வாழ்க்கை அழகாக சென்று கொண்டு இருந்தது!!



திடீர் என்று ஒரு நாள் அவன் விறகு கடை தீ பிடித்து எரிந்த நிலையில் எல்லா விறகுகளும் எரிந்து கரியாகி விட்டன. மறுபடியும் அவன் ஏழ்மைக்கு தள்ளப்பட்டான்.


நண்பர்கள் ஆறுதல் சொன்னார்கள் ஆனால் ஆறுதல் வாழ்க்கைக்கு உதவாதே !!


சோகத்துடன் வீடு வந்தான்!!


செய்தி அறிந்த மனைவி அவனை அன்புடன் வரவேற்று உணவளித்து அவனை ஆறுதல் படுத்தினார்!!


மறுபடியும் என்ன செய்வது என்று கலக்கமுற்று அழுத கணவனை!!


விறகு தானே எரிந்தத்து அது கரியாக இருக்கிறது அல்லவா!!


நீங்கள் நாளை முதல் கரி வியாபாரம் செய்யுங்கள் என்று யோசனை சொன்னார்!!



மறுபடியும் புது நம்பிக்கை வந்தவனாய்!!


நாளைய விடியலுக்கு தயாராகி உறங்கி போனானன் நிம்மதியாக!!


ஒருவன் வாழ்க்கையில் வெற்றி பெற பெரிய செல்வமோ, பணமோ தேவையில்லை , தோல்வியுற்றால் தோல் சாய்ந்து ஆறுதல் கொடுக்க நல்ல துணைவி அன்பான மனைவி இருந்தால் போதும் அவன் முடமாக இருந்தாலும் சிகரம் தொடுவான்!!


மனைவியை நேசியுங்கள்!!


நன்றிகள்!!


இன்று படிதத்தில் பிடித்தது!!

No comments