Just relax

Just relax
Just Relax__keep deep breath..

Best Posts

Election பகிர்வு

Election பகிர்வு 



ஒரு அறையில் 6 குரங்குகளை வைத்து பூட்டினர் விலங்கியல் விஞ்ஞானிகள்.அறையின் சீலிங்கில் ப்ளாஸ்டிக் வாழைப்பழங்களைப் பழபழவென்று தொங்க விட்டனர்

அங்கு வைக்கப்பட்டிருந்த ஏணியில் ஏறினால் மட்டுமே வாழைப் பழங்களை எடுக்க முடியும்...

சும்மா இருக்குமா குரங்குகள்? ஏணியில் ஏறி அந்த வாழைப்

பழங்களை அடைய முயன்றன.

எந்த குரங்காவது அந்த ஏணியில் ஏறினால், விஞ்ஞானிகள் ஐஸ் தண்ணீரை பீய்ச்சியடித்தனர்

குரங்குகள் குளிர் தாங்காமல் வெடவெடத்து போய் இறங்கிவிட்டன.

மீண்டும் குரங்குகள் ஏறின.

ஐஸ் நீர் பீய்ச்சியடிக்கப்பட்டது. குரங்குகள் குளிர் தாங்காமல் வெடவெடத்து போய் இறங்கிவிட்டன.

மீண்டும் மீண்டும் குரங்குகள் ஏறின..

ஐஸ் நீர் பீய்ச்சியடிக்கப்பட்டது.. குரங்குகள் குளிர் தாங்காமல் வெடவெடத்து போய் இறங்கிவிட்டன.

இப்படியே சில நாட்கள் சென்றன. குரங்குகளுக்கு வாழைப்பழத்தைத் தவிர மற்ற உணவுகள் குறிப்பிட்ட நேரத்தில் சரியாக வழங்கப்பட்டன.

மீண்டும் ஒரு குரங்கு ஏறியது.

ஜஸ் தண்ணீருக்குப் பயந்து மற்ற ஐந்து குரங்குகளும் ஏணியில் ஏறிய அந்த குரங்கை அடித்து இறக்கி விட்டன.

இன்னொரு குரங்கு ஏறியது..

ஜஸ் தண்ணீருக்கு பயந்து மற்ற ஐந்து குரங்குகளும் ஏணியில் ஏறிய அந்த குரங்கை அடித்து இறக்கி விட்டன.

மற்றுமொரு குரங்கு ஏறியது...

ஜஸ் தண்ணீருக்கு பயந்து மற்ற ஐந்து குரங்குகளும் ஏணியில் ஏறிய அந்த குரங்கை அடித்து இறக்கி விட்டன.

இப்போதெல்லாம் விஞ்ஞானிகள் ஐஸ் நீரைப் பீய்ச்சியடிப்பதை முற்றலுமாக நிறுத்திவிட்டனர்.

அப்படியும்...

இன்னொரு குரங்கு ஏறியது...

ஜஸ் தண்ணீருக்கு பயந்து மற்ற ஐந்து குரங்குகளும் ஏணியில் ஏறிய அந்த குரங்கை அடித்து இறக்கி விட்டன.

இப்போது...

அந்த 6 குரங்குகளில் ஒன்றை மட்டும் எடுத்துவிட்டு புதிய குரங்கு ஒன்றை வைத்தனர்.

அந்த புதுக்குரங்கு என்னபண்ணும்.?

க்ரெக்ட்..!

வாழைப்பழத்தை எடுக்க ஏணியில் ஏறியது. மற்ற 5 பழைய குரங்குகளும் புதுக்குரங்கின் மண்டையிலேயே போட்டு இறக்கிவிட்டன..

புது குரங்குக்கு ஒன்றும் புரியவில்லை...

என்னடா இது அந்த வாழைப்பழத்தை இதுங்களும் எடுக்க மாட்டேங்குதுங்க. நம்மையும் எடுக்க விடமாட்டேங்குங்க என்று நினைத்துக் குழம்பியது...

மீண்டும் வாழைப்பழத்தை எடுக்க ஏணி வழியாக ஏறியது. மற்ற ஐந்து பழைய குரங்குகளும அந்தப் புதுக் குரங்கின் மண்டையிலேயே போட்டு இறக்கிவிட்டன..

அடுத்த நாள், இன்னொரு பழைய குரங்கை எடுத்துவிட்டு இரண்டாவது புதிய குரங்கை நுழைத்தனர் விஞ்ஞானிகள். அந்த இரண்டாவது புதுக்குரங்கு என்ன பண்ணும்...?

ம்... வெரி குட்..!

இரண்டாவது புதுக்குரங்கு வாழைப் பழத்தை எடுக்க ஏணியில் ஏறியது.. மற்ற 4 பழைய குரங்குகளும்,

அந்த முதல் புதுக்குரங்கும்,

புதிதாக வந்த இரண்டாவது குரங்கின் மண்டையிலேயே போட்டு இறக்கிவிட்டன..

மீண்டும் அந்த இரண்டாவது புதுக்குரங்கு வாழைப்பழத்தை

எடுக்க ஏணியில் ஏற,

மற்ற 4 பழைய குரங்குகளும்

அந்த முதல் புதுக்குரங்கும்

புதிதாக வந்த இரண்டாவது குரங்கின் மண்டையிலேயே போட்டு இறக்கிவிட்டன.

இப்படியே நாட்கள் போச்சு.

விஞ்ஞானிகளும் ஒவ்வொரு பழைய குரங்காக வெளியே எடுத்துவிட்டு அதற்கு பதிலாக ஒரு புதிய குரங்கை வைத்தனர்.

புதிதாக வந்த ஒவ்வொரு குரங்கும் அந்த வாழைப்பழத்தை எடுக்க ஏணியில் ஏற...

ஏற்கனவே இருந்த மற்ற குரங்குகள் அதனை அடித்து கீழே இறக்கிவிட, இப்படியே போனது.

ஒரு காலக்கட்டத்தில் அந்த அறையில் இருந்த அத்தனை பழைய குரங்குகளையும் நீக்கிவிட்டு...

ஆறாவதாக புதிய குரங்கை வைத்தனர்...

இப்போ ஆறும் புதிய குரங்குகள்..

இப்ப என்னாச்சு..?

ம்... அதே தான்...!

ஆறாவதாக வந்த புதுக்குரங்கு வாழைப்பழத்தை எடுக்க ஏணியில் வழியாக ஏறியது.மற்ற 5 புதிய குரங்குகளும் புதிய-தாக வந்த

6 வது குரங்கின் மண்டையிலேயே போட்டு இறக்கிவிட்டன.

இப்போ..

'எதற்காக அந்த 5 குரங்குகளும் இறக்கிவிட்டாங்க..' என்று அந்த 6வது புதிய குரங்கிற்கும் தெரியாது.

'எதற்காக அந்த 6வது புதிய குரங்கை இறக்கிவிட்டோம்' என அந்த 5 புதிய குரங்குகளுக்கும் தெரியாது.

இப்படித்தான் பல ஆண்டுகளாக தமிழர்கள் .

*** தமிழை வளர்த்தார்..

*** கல்லக்குடியில்

ரயில் மறியல் செய்தபோது கண்ணில் அடி பட்டது.

**** எமர்ஜென்சியில் கைதாகி

சிறையில் இருந்தார்.

அதே மாதிரி, பெரியார் ஜாதிய ஒழிக்க படு பட்டாரு..னு சொல்றாங்க

ஆனால் ஜாதி ஒழிஞ்சுருச்சா...

காந்தி சுதந்திரம் வாங்கி தந்தார்..

நேரு சுதந்திரத்திற்காக போராடினார்..

ஆங்கிலேயர்கள் வந்ததால்தான் தமிழர்களுக்குக் கல்வி கிடைத்தது.

மொகலாய ஆட்சி சிறப்பானது

என்று இதுபோல பல பொய்களை பாட புத்தகத்தில் புகுத்தினர்..

புத்தகத்தில் இருப்பதை உண்மையென்று படித்தோம்..

இன்றைக்கும் படித்ததை உண்மையென்று கொண்டாடுகிறோம் ..

மறைக்கப்பட்ட நம் வரலாறை அறியாமலேயே வாழ்ந்து கொண்டிருக்கிறோம்..

Election பகிர்வு

No comments