Just relax

Just relax
Just Relax__keep deep breath..

நீங்கள் தனித்துவமானவர்

ஓர் இனிய மாலையில்...

200 பேர்கள் கூடியிருந்த அரங்கத்தில்
ஒரு பேச்சாளார் ஒரு 500 ரூபாய்


நோட்டைக் காட்டி "யாருக்கு இது பிடிக்கும்?” எனக் கேட்டார்.

கூடியிருந்த அனைவரும் தனக்கு பிடிக்குமென கையைத் தூக்கினர்.

பேச்சாளார் “உங்களில் ஒருவருக்கு
இந்த 500 ரூபாயைத் தருகிறேன். ஆனால் அதற்கு முன்..." என்று சொல்லி
அந்த 500 ரூபாயைக் கசக்கினார்.

பிறகு அதை சரி செய்து “இப்போதும்
இதன் மீது உங்களுக்கு விருப்பம் இருக்கிறதா?” என்று கேட்டார்.
அனைவரும் கையைத் தூக்கினர்.

உடனே அவர் அந்த ரூபாய் நோட்டை தரையில் போட்டு காலால் தேய்த்து,
அந்த அழுக்கான நோட்டை காட்டி
“இன்னும் இதன் மேல் உங்களுக்கு
விருப்பம் இருக்கிறதா? என்றார்.
அனைவரும் இப்போதும் கைகளை தூக்கினர்.

அவர் தொடர்ந்தார், சாதாரண ஒரு
500 ரூபாய்த்தாள் பலமுறை கசங்கியும், மிதிபட்டும், அழுக்கடைந்தும்
அதன் மதிப்பை இழக்கவில்லை.

ஆனால் மனிதர்களாகிய நாம் அவமானப்படும் போதும் ,
தோல்விகளை சந்திக்கும் போதும் மனமுடைந்து போய் நம்மை நாமே
தாழ்த்திக் கொள்கிறோம்.

உண்மையில் நம்முடைய மதிப்பு என்றைக்கும் குறைவதில்லை.
நீங்கள் தனித்துவமானவர். இவ்வுலகில் உள்ள ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தனித் தன்மை இருக்கும். அதன் மதிப்பு என்றைக்கும் குறைவதில்லை!

ஆம் நட்பூக்களே..

நாம் அனைவரும் தனித்துவமானவர்கள். வாழ்க்கை என்ற பயிர்க்கு
தைரியமும்_தன்னம்பிக்கையும்தான் உரம். ஆகையால் தன்னம்பிக்கையை இழக்காமல் வாழுங்கள்.

*வாழ்க வளமுடன்*

No comments