Just relax

Just relax
Just Relax__keep deep breath..

Best Posts

உங்கள் முதல் அடி எப்போது?


படித்ததில் பிடித்தது

"உங்கள் முதல் அடி எப்போது?"
         
           ஒரு நிலம் எவ்வளவுதான் வளமானதாக இருந்தாலும், அதில் உழவு மேற்கொள்ளாவிட்டால் எதற்கும் பயன் அளிக்காது. அது போலவேதான் மேலும் மேலும் கற்றுக்கொள்ள ஆர்வம் இல்லாத மனித மூளையும் துருப்பிடித்துப் போகும். கற்பதற்கு மட்டும் எந்தக் காலத்திலும் தடை போடாதீர்கள்!

          பின்வரும் வார்த்தைகளை அடிக்கடி உபயோகிக்கப் பழகுங்கள்... 'என்ன?’, 'ஏன்?’, 'எங்கே?’, 'எப்போது?’, 'எப்படி?’, 'யார்?’.

          உங்கள் ஈகோ உங்கள் கட்டுப்பாட்டுக்குள் இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள். உங்கள் முடிவுகளை அது மிக மோசமாகப் பாதிக்காதவாறு அடிக்கடி சுய பரிசோதனையில் ஈடுபடுவது அவசியம்!

         எல்லா சாதனையாளர்களுக்கும் உங்களுக்குமான ஒற்றுமை... உங்கள் அனைவருக்கும் சரிசமமாக தினமும் 24 மணி நேரம் கையில் இருப்பதுதான்! அந்த நேரத்தை எவ்வளவு திறமையாக நீங்கள் கையாள்கிறீர்கள் என்பதில்தான் அடங்கி இருக்கிறது, உங்கள் வளர்ச்சியின் பிரமாண்டம். இதில் அலுவல் நேரத்துக்குப் பிறகான நேரத்தைத் திட்டமிடுவதும் அடங்கும்!

           எட்டப்படும் வரை குறிக்கோள்கள் என்பவை வெறுமனே நம்பிக்கைகள்தான். உங்கள் குறிக்கோள்கள் திட்டமிட்டதாக, எட்டக்கூடியதாக, வளர்ச்சியைக் கணக்கிடக்கூடியதாக, நிர்ணயித்த காலக்கெடுவுக்குள் அடைவதற்கான செயல்பாடுகளை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்!

             100 சதவிகிதம் கச்சிதமான மனிதன் இன்னும் பிறக்கவில்லை. அதனால், பிறர் செய்யும் தவறுகளை மன்னிக்கக் கற்றுக்கொள்ளுங்கள். ஆனால், அந்தத் தவறில் இருந்து அவர்கள் அறிய வேண்டிய பாடத்தை அவர்களுக்கு உணர்த்த மறக்காதீர்கள்!

            ஒன்று கவனித்து இருக்கிறீர்களா..? ஏதேனும் ஒரு விஷயத்தில் முடிவெடுக்கத் தாமதித்துத் தள்ளிப்போடும்போது, அது மேலும் மேலும் சிக்கலாகும். எந்த விஷயத்திலும் முடிவு எடுக்கத் தயங்காதீர்கள்!

           இந்த உலகத்தில் எதுவுமே,  எதுவுமே உங்கள் கைக்கு எட்டக்கூடியதுதான். நீங்கள் விரும்புபவற்றை உங்களை நோக்கி ஈர்க்கக்கூடிய காந்தத் திறனை மட்டும் வளர்த்துக்கொள்ள வேண்டும். கடின உழைப்பும், தணியாத ஆர்வமும்தான் அந்த காந்தத் திறனை அதிகரிக்கும்!

           எதையும் கற்றுக்கொள்ளும் மாணவ மனப்பான்மையுடனேயே இருங்கள். நிச்சயமாக உங்களுக்குப் பல சங்கதிகள் தெரியாது. அதை மற்றவர்களிடம் இருந்து தான் நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டும்!
அனுபவங்களில் இருந்து கற்றுக்கொள்வதைக் காட்டிலும் வலி மிகுந்தது, அந்த அனுபவங்களில் இருந்து கற்றுக்கொள்ளாமல் இருப்பதுதான்!

           அலுவல் திட்டமிடல்களோ, குடும்ப நல முடிவுகளோ எதுவுமே ஒரு பயணம்போலத்தான். அதற்கு ஒரு மேப் அவசியம். செல்ல வேண்டிய திசை, செலவுக்கான பட்ஜெட், அடைய வேண்டிய இலக்கு என அனைத்தும் அத்தியாவசியம்!
உங்கள் நினைவாற்றலை அளவுக்கு அதிகமாக நம்பாதீர்கள். சின்னச் சின்ன விஷயங்களைக் குறிப்புகளாக எழுதிக்கொள்ளுங்கள். நாம் பேசியவற்றுள் பாதி வார்த்தைகளை அடுத்த 60 நிமிடங்களுக்குள் நாம் மறந்துவிடுவோம்!

              நிச்சயம் உங்களால் பெரிய சாதனைகளை நிகழ்த்த முடியும், சின்னஞ்சிறு விஷயங்களில் உங்கள் நேரத்தைத் தொலைக்காமல் இருந்தால்!

         டொனால்ட் ட்ரம்ப் ஒரு முறை சொன்னார், 'எனக்கு எதையும் மிகப் பெரியதாக யோசிக்கப் பிடிக்கும். பலர் பிரமாண்ட வெற்றிக்கு அஞ்சியும், தீர்க்கமாக முடிவெடுக்கத் தயங்கியும் சின்னதாக யோசித்துக்கொண்டு இருக்கிறார்கள். அது என்னைப் போன்றவர்களுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கிறது!’

             அதே சமயம், பெரிதாக யோசித்துக்கொண்டு இருந்தால் மட்டும் போதாது. நீங்கள் உலகத்தைச் சுற்றி வரத் திட்டமிட்டிருந்தாலும், அந்த முதல் அடி உங்கள் வீட்டு வாசலைத் தாண்டுவதாகத்தான் இருக்கும்.

:feet:உங்கள் முதல் அடி எப்போது?:feet:

No comments