Just relax

Just relax
Just Relax__keep deep breath..

நீங்கள் வெற்றி பெற விரும்பினால்...?

*நீங்கள் வெற்றி பெற விரும்பினால்...?*

*நீங்கள் வெற்றி பெற வேண்டுமென்றால் உங்களுக்கான ஒரு வழியை நீங்கள் உருவாக்குங்கள். உங்கள் திறமையை உங்கள் தகுதியை வளர்த்துக் கொள்வதில் மட்டுமே கவனம் செலுத்துங்கள்.*

*நீங்கள் வெற்றி பெற வேண்டுமென்றால் அவமானங்களை துசி தட்டி தூக்கி எறிந்துவிட்டுச் செல்லும் துணிவோடு இருங்கள்.*



*உங்கள் உடன் இருப்பவர்களும் உங்களை ஏளனம் செய்யும் நிலை உருவாகும் அதை நினைத்து வருந்துவதை விடுத்து முன்னேற்றம் காண்பதில் முனைப்புடன் இருங்கள்.*

*உங்கள் வெற்றியைத் தடுக்க ஆயிரம் ஆயிரம் சூழ்நிலையில் உருவாகும் அதைக் கண்டு அஞ்சி பாதியில் பின்வாங்கி விடாதீர்கள் மாறாக எந்த நிலை வரினும் உங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக இருங்கள்.*

*உங்கள் இலக்கிற்கும், தொழிலிற்க்கும், உழைப்பிற்கும் மரியாதை செலுத்துங்கள். அவைகளுக்கு உண்மையாக இருங்கள்.*

*இவ்வளவு தான் உன்னால் முடியும் என்று ஊரே சொல்லும் அதைக் கேட்டுக் கேட்டு உங்கள் மனம் கூட ஒருநாள் அதன் சோம்பேறித் தனத்தை வளர்ப்பதற்காக என்னால் இவ்வளவு தான் முடியும் என்று உங்களையே நம்ப வைக்க முற்படும் அவற்றை எல்லாம் நம்பிவிடாதீர்கள்*.

*உங்கள் தகுதியை இந்த ஊரோ அல்லது இந்த உலகமோ முடிவு செய்யக் கூடாது அது மட்டும் இல்லை உங்கள் சோம்பலோ அல்லது உங்கள் மனமோ கூட முடிவு செய்யக் கூடாது. அதை உங்கள் உண்மையான உழைப்பு மட்டுமே முடிவு செய்திட வேண்டும்.*

*உங்கள் வெற்றியை வேறு யாரும், எதுவும் முடிவு செய்ய அனுமதிக்காதீர்கள். உங்கள் உண்மையான உழைப்பிற்கு மட்டுமே அந்தத் தகுதி உள்ளது.*

*யாரிடம் இருந்தும், எதனிடம் இருந்தும் கற்றுக் கொள்ள ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நொடியும் தயாராகவே இருங்கள்*.

*" வெற்றி எளிமையானது இல்லை ஆனால், நீங்கள் விரும்பி உண்மையாக உழைத்தால் கடினமானதும் இல்லை."*

*வெற்றியை நோக்கிய உங்கள் பயணம் வெற்றி பெற என் அன்பும் வாழ்த்துக்களும்.*..💐💐


No comments