Just relax

Just relax
Just Relax__keep deep breath..

Best Posts

பணக்காரர்களின் குணங்கள்

சாதாரண மக்கள் தங்கள் மிகவும் கஷ்டப்பட்டு கடன் வாங்கி கூட வாழ முடியாமல் போகும்போது பல பணக்காரர்கள் தங்கள் விடுமுறை நாட்களை சுகபோவத்தோடும் உல்லாசமாக மனநிறைவோடும்  அனுபவிக்கின்றனர்…. அவர்களால் மட்டும் எப்படி முடிகிறது?


அதை பணக்காரர்களிடமே கேட்டு தெரிந்து கொள்ளலாமே…..

* பணக்காரர்களுக்கும் மற்றவர்களுக்கும் இடையிலான முக்கிய வித்தியாசம் இலட்சியதோடு வாழ்வதாகும், மற்றவர்களுக்கு இலட்சியம் இல்லாமல் இல்லை ,  ஆனால் அவர்கள் இலட்சியத்தை நோக்கி பயணிப்பது இல்லை.

* நம் திறமையின் வளர்ச்சி தான் நம் வருமானத்தின் வளர்ச்சியாகும், அப்போது தான் பணத்தோடு வரும் சவால்களையும், பிரச்சினைகளையும் சமாளிக்க முடியும்.

* பணத்தை கையாள தெரியாதவன் கோடி ரூபாய் கிடைத்தாலும் இழந்து விடுவான். சிறந்த உதாரணம் லொட்டரி சீட்டில் பெரிய பணக்காரன் ஆகிய பலர் கொஞ்ச காலத்திற்கு பிறகு பணத்தை இழக்கின்றனர் . ஆனால் திறமையினால் பணக்காரன் ஆனவன் எல்லாவற்றையும் இழந்தாலும் திரும்ப பெற்று விடுவான்.


* பணக்காரர்கள் தங்கள் வாழ்க்கையை தாங்களே உருவாக்குவதாக நம்புகிறார்கள் மற்றவர்கள் வாழ்க்கை தன்பாட்டில் போவதாக நினைக்கின்றார்கள்.


* பணக்காரர்கள் தங்கள் வாழ்க்கைக்கு தாமே பொறுப்பு எடுப்பார்கள் மற்றவர்கள் வாழ்க்கைக்கு தானே பொறுப்பு எடுக்க முடியாத மனநிலையை கொண்டிருப்பர்.


* பழி போடுவது, சந்தர்ப்ப சூழ்நிலையை நியாயப்படுத்துவது, போன்றன ஏழைகளின் மனநிலையாகும்.


* பணக்காரர்களின் குறிக்கோள் ஏராளமான செல்வ த்தை வைத்திருப்பது ஏழைகளின் குறிக்கோள் மாதாந்த செலவுக்கு தேவையான பணத்தை பெறுவது. சேமிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்காமை


* பணக்காரர்கள் தாம் செல்வச்செழிப்போடு வாழ வேண்டும் என உறுதியோடு இருப்பார்கள், அனால் மற்றவர்கள் பணக்காரனாய் வாழ வேண்டுமென ஆசை மட்டும் படுவார்கள்,  அதற்கான சரியான திட்டமிடல் முயற்சிகள் ஏதும் செய்ய மாட்டார்கள்.


* பலருக்கு வாழ்வில் தேவையானவை கிடைக்காமல் போவதற்கு காரணம் தங்களுக்கு என்ன வேண்டும் என தெளிவான திட்டமிடல் இல்லாமையே காரணம். தாங்கள் எதற்காக பணக்காரன் ஆகணும், தங்கள் நோக்கம் என்ன என்பதை சரியாக தீர்மானித்தவர்களே இன்று பெரிய பணக்காரன் ஆகி இருக்கின்றனர்.


* யார் மதிப்பான சேவைகளை பிறருக்கு தருகின்றார்களோ அவர்களுக்கு அதிகமான பணம் கிடைக்கும், எத்தனை பேருக்கு தங்களால் சேவைகளை கொடுக்க முடியுமோ அவ்வளவு பெரிய பணக்காரர் ஆகலாம். 
                                                                            உதாரணம்:-  பில் கேட்ஸ், கம்ப்யூட்டர் மூலம் நிறைய பேரின் வேலைகளை இலகுவாக்கினார் அதனால் பெரிய பணக்காரர் ஆனார்.

* பணக்காரர்கள் உழைத்த பணத்தை முதலீடு செய்வார்கள், மற்றவர்கள் செலவு மட்டும் செய்வார்கள்.

 * அநேகமானோர் செய்யும் மிகப்பெரிய தவறு பணக்காரர்களை நம் எதிரியாக நினைப்பது தான், பணக்காரர்களை எதிர்க்கும் பொது அவர்களின் பணத்தினையே எதிர்க்கிறார்கள்,  அதனால் அவர்கள் எதிர்க்கும் பணத்தினை பெறுவது மிகவும் கடினமாகிறது.

* பணக்காரர்கள், மற்ற பணக்காரர்களின் வெற்றியை பார்த்து ஊக்கம் அடைவார்கள், அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ள நினைப்பார்கள்.

* பணக்காரர்கள் இலாபத்தை அடிப்படையில் பணம் பெறுகிறார்கள், அனால் மற்றவர்கள் தங்கள் நேரத்தை பணமாக மாற்றிக் கொள்கின்றனர்.

* பணக்காரர்களுக்கு தூங்கும் நேரத்திலும் பணம் வந்துகொண்டிருக்கும், மற்றவர்கள்  தாம் வேலை செய்யும் குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் பணம் உழைக்கின்றனர்.


* பாதுகாப்பாக மாதம்தோறும் வரும் பணம் எமது கட்டண பட்டியல்களை செலுத்த உதவுமே தவிர, எம் கனவுகளை நனவாக்க உதவாது.

* பணக்காரர்கள் தங்களுக்கு பணம் வரும் வழிகளை அதிகரிக்கின்றனர், மற்றவர்கள்  செலவுகளிலேயே கவனத்தை வைத்திருக்கின்றனர்.

* வருமானம், சேமிப்பு, முதலீடு  போன்றவையே சொத்து மதிப்பை நிர்ணயிக்கினறன.

* பொருளாதார வெற்றிக்கும், தோல்விக்கும் காரணமாக அமைவது   “பணத்தைக் கையாளும் பழக்கங்களே”

* பணக்காரர்கள் தொடர்ந்து கற்றுக்கொண்டும் வளர்ந்து இருக்கிறார்கள்,  அனால் மற்றவர்கள் தங்களுக்கு எல்லாம் தெரியும் என நினைக்கிறார்கள்,  புதிதாக எதையும் தேட மாட்டார்கள்.   அதனால் தான் உலகில் அதிகமானோர் பணத்துக்காக போராடிக்கொண்டே இருக்கின்றார்கள்.

* ஏழைகள் அல்லது நடுத்தர வர்க்கத்தினர் ஒன்று சேர்ந்தால் பணத்தை எப்படி செலவழிப்பது என திட்டம் போடுவார்கள். அதாவது சுற்றுலா செல்வது கழியாட்ட நிகழ்வுகள் திரையரங்குக்கு போவது போன்றவை.                                                               ஆனால் பணக்காரர்கள்ஒன்று சேர்ந்தால் பணத்தை உருவாக்குவது பற்றி கலந்துரையாடுவார்கள்.

* நம் எண்ணங்களே நாம் இப்போது இருக்கும் நிலைமைக்கு காரணம். நாம் இதுவரை செய்த செயல்களையே செய்துகொண்டு வித்தியாசமான முடிவுகளை எதிர்பார்ப்பது முட்டாள் தனமானது.

* பிறக்கும் பொது யாரும் பொருளாதார மேதையாக பிறப்பதில்லை மெல்ல மெல்ல கற்றுக்கொண்டனர் அவர்களால் முடியுமென்றால் உங்களாலும் முடியும் !

இது அடிப்படையான சில வித்தியாசங்கள் தான்.  இவற்றை சரிவர விளங்கி கொண்டாலே உங்களின் கனவு வாழ்க்கை பயணத்திற்கு துணையாக இருக்கும் !

No comments