அவமதிப்பு _ ஜென் கதைகள்
தன் குருவிடம் ஒருவர் கேட்டார்,
*”என்னை பலரும் அவமானப்படுத்துகிறர்கள்.நான் என்ன செய்வது..?*
குரு சொன்னார், “அவற்றைப் பொருட் படுத்தாதீர்கள்”.
“என்னால் முடியவில்லையே”!
“அப்படியானால் அவற்றைக் கடந்து செல்லுங்கள்”. “அதுவும் முடியவில்லையே!”
“சரி! அப்படி யென்றால் அவற்றைக் கண்டு சிரித்து விடுங்கள்.
“குருவே! அதுவும் முடியவில்லை!”
குரு சொன்னார்,
“அவமானங்களை உங்களால் நிராகரிக்க முடியவில்லை, கடக்க முடியவில்லை, கண்டு சிரிக்க முடியவில்லை
என்றால் அந்த அவமானங்களுக்கு நீங்கள் தகுதியுடையவர் என்று அர்த்தம்😁😁😁
No comments