நான் மன நிம்மதியோடு வாழ என்ன செய்யணும்
நான் மன நிம்மதியோடு வாழ என்ன செய்யணும்?
1. பிறருக்கு கடன் கொடுக்காதீர்கள் பிறரிடமிருந்து கடன் வாங்காதீர்கள். இருப்பதைக் கொண்டு மட்டுமே சிறப்புடன் வாழுங்கள்.
2. பிறரைப் பார்த்து பொறாமைப் படுவதைவிட இன்று நமக்கு கடவுள் கொடுத்ததை பலருக்கு கடவுள் கொடுக்காமல் இருக்கிறார் என்று சிந்தித்து பொறாமை குணத்தை விட்டொழியுங்கள்.( யாருக்கு தெரியும் அடுத்த ஜென்மத்தில் நாம் அமெரிக்கா பிரசிடெண்ட் ஆ கூட இருக்கலாம் பாஸ் )
3. ஆரோக்கியமான உணவு சாப்பிடுங்கள்.உணவிற்கு அதிக தொகையை செலவிடுங்கள்.( நமக்கு சோறு தான் முக்கியம் )
4. உங்களுடைய இலக்கை நோக்கி நீங்க ஓடுங்க இல்லையா நடங்க அதுவும் இல்லையா தவழ்ந்த கூட போங்க. ஆனா எப்பயுமே முயற்சியை விட்டுறாதீங்க.
5. நடந்து முடிஞ்சத நெனச்சி நெனச்சி இருக்கிற காலத்தையும் வீணடிக்காதீர்கள்.
6. கிடைத்த வேலையை சந்தோஷமாக செய்யுங்கள்.பிடித்த வேலைக்கு முயற்சி செய்து கொண்டே இருங்கள். பிடித்த வேலை கிடைக்கவில்லை என்று கிடைத்த வேலையை உதாசீனப்படுத்தாதீர்கள்.
7. அம்மா அப்பாவிற்கு எதுவும் தெரியாது என்று நினைக்காதீர்கள்.உங்களுக்கு தெரிந்ததை அவர்களுக்கு கற்றுக் கொடுங்கள்.
8. எதையும் எதிர்பார்க்காமல் உதவி செய்யுங்கள். அனைவரிடமும் அன்பாக சிரித்து பேசி பழகுங்கள்.
இதுல புடிச்சத எடுத்துக்கோங்க பிடிக்காததை விட்டுருங்க.
பொறுமையுடன் படித்ததற்கு நன்றி நன்றி
No comments