Just relax

Just relax
Just Relax__keep deep breath..

வாழ்வில் மகிழ்ச்சி

 வாழ்வில்

மகிழ்ச்சி.


ஒரு அலுவலகத்தில் ஐம்பது வயது மேற்பட்டோருக்கு மனதளவிலான 

ஒரு ஆலோசனை அமர்வை ஏற்பாடு செய்திருந்தார்கள்.


ஒரு பிரபல ஆலோசகர் தலைமை தாங்கி அந்த அமர்வை இடை ஊடாடும் ஆலோசனை அமர்வாக(inter active councelling session) அழாகாக நடத்தினார்.


ஆலோசகர் session நடத்தும் போது, ஒருவரை  பார்த்து உங்கள் வாழ்க்கையில் எது மிகவும் முக்கியம்? முதன்மையாக கவனத்தை ஈர்ப்பது பொருளோ மனிதரோ ஏதோ ஒன்று. உங்கள் மனதில் ஒரு தனி இடம் பெற்ற அந்த ஒன்று எது? என்று கேட்டார்.


எனது பிள்ளைகள்தான் எனது உலகம்" என்று அவர் பதில் அளித்தார்.


பலரும் அதே பதிலைதான் சொன்னார்கள்.


ஒருவர் மட்டும் "நான் மிகவும் முக்கியமாக கருதுவது எனது மனைவியையும் அவரது ஆரோக்கியத்தையும்தான் " என்றார்.


உடனே அந்த ஆலோசகர் கைதட்டி ஆர்பரித்து தனது பாராட்டுக்களை தெரிவித்தார்.


பலருக்கு அது நெருடலாக இருந்தது.


அவர்கள் முகபாவத்தை பார்த்து, 

ஆலோசகர் கூறினார் :


பலர் பிள்ளைகளையே உலகம் என்று நினைக்கிறீர்கள். உங்கள் கருத்து அவரவர் சொந்த கருத்து. ஆனால் அதில் உள்ள அடிப்படை பிழை ஒன்றை நான் இங்கு சுட்டி காட்ட விரும்புகிறேன்.


ஒரு கதை சொல்கிறேன். 


ஒரு ஊரில் ஒரு பெரிய கோழி பண்ணை சொந்தகாரர் இருந்தார். அந்த ஊரின் 

மொத்த முட்டை வியாபாரத்தையும் வளைத்து போட்டிருந்தார். 


அந்த வியாபாரியின் மொத்த கவனமும் அங்கு முட்டை பொறிக்கும் கோழிகள் மேலேயே இருந்தது. ஆரோக்கியமாக, பசியில்லாமல் இருக்க நேர்த்தியான உணவு கொடுத்து வளர்ப்பதில் முழு கவனத்துடன் இருந்தார். 


ஏனெனில் அந்த கோழிகள் ஆரோக்கியமாக வளர்ந்தால் தான் நேர்த்தியான முட்டைகளை கொடுக்கும் என்பது அவருக்கு தெளிவாக தெரிந்த உண்மை. அவர் மட்டும் அந்த கோழிகளை சரியாக பராமரிக்காமல் விட்டு விட்டால் அவரது முட்டை வியாபாரமே

படுத்து விடும். அடிப்படை உண்மை. "


இவ்வாறு கூறிய ஆலோசகர் மேலும் தொடர்ந்தார்.


ஒரு கணவரான உங்களுக்கு வாழ்க்கையில் மிக முக்கியமான மனிதர் உங்கள் மனைவிதான். ஏனெனில் அவர் உங்கள் வாழ்க்கை துணை. பிள்ளைகள் அவர் மூலம் வந்த சொத்துகள்.


நீங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் நன்றாக பார்த்து கொண்டு சந்தோஷமாக வாழ்ந்தால் உங்களது பிள்ளைகள் ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சியாகவும் முழுமைடையடைந்த வாலிபர்களாக பரிமளிப்பார்கள். 


ஆனால் நீங்கள் ஒருவரை ஒருவர் சரியாக கவனித்து வாழவில்லை என்றால் உங்களை பின்பற்றி அவர்களும் ஏனோ தானோ என்று வளர்ந்து நிற்பார்கள்.


குடும்பத்தில்  உங்கள் மனைவியை நீங்களும், மனைவி கணவனையும் மகிழ்ச்சியாக ஆரோக்கியமாக வைத்து கொண்டால் பிள்ளைகளும் ஆரோக்கியமாக உடல் மற்றும் மன அளவிலும் இருப்பார்கள்" என்று முடித்தார்.


உண்மைதான். நாம் எப்படி நேர்த்தியாக  வாழ்ந்து காட்டுகிறோமோ, அப்படி தான் பிள்ளைகளும் அவர்கள் வாழ்க்கையில் தெளிவாக இருப்பார்கள். இது தொடர்கதை போல தொடரும்.


சிறு சிறு பிணக்குகள் வாழ்வில் வருவது சகஜம். ஆனால் வாழ்நாள் பூராவும் நம்மோடு பயணித்து, நம் சுக துக்கங்களால் பங்கு கொண்ட வாழ்க்கை துணை நமக்கு :


Always Number one.


நமது ஆரோக்கியமான சிந்தனை அதாவது foundation சிறப்பாக இருந்தால், வாழ்க்கை எனும் கட்டிடம் strong ஆக தான் இருக்க வேண்டும்.


கருத்து வேறுபாடுகள் இருந்தால், மனம் விட்டு பேசி, சரி செய்து கொண்டு, வாழ்வில் பயணித்தால், எல்லாமே சிறப்புதான்.


Tolerance, Adjustment, Sacrifice.

மூன்றும் அருட்தந்தை கூறும்

வாழ்வையே மாற்றும் மந்திர சொற்கள்.


நாம் எப்படி வாழ்ந்து காட்டுகிறோமோ

அப்படித்தான் பிள்ளைகளும்,

தொடரும் தலைமுறைகளும்.


சிறு எண்ணத் தேடல், நம்முள் ஒரு மாற்றம்,

வாழ்வையே மாற்றும் மந்திரக்கோல்கள்.

No comments