திருமண வாழ்க்கையின் அடிப்படை
வயதான தம்பதியர் இருவரும்
தனியாக ஒரு வீட்டில் வசிக்கிறார்கள்
பிள்ளைகள் வெளிநாட்டில் இருக்கிறார்கள்
அவர்களை சந்திக்க யாரும் வருவதில்லை
அவர்கள் வீட்டுக்கருகில் புதுசாக கல்யாணமான இளம் தம்பதி குடியேறுகிறார்கள்
இருவரும் வேலைக்கு செல்பவர்கள்
வயதான தம்பதியரும்
இளம் தம்பதியரும் அன்பைப் பரிமாறிக் கொள்கிறார்கள்
இரண்டு குடும்பமும் ஞாயிற்றுக்கிழமை சந்தித்துக் கொள்வதை வழக்கமாக்கிக் கொள்கிறார்கள்
ஒவ்வொரு வாரமும் காப்பி டப்பாவை திறப்பதற்காக அந்த வயதான பெண்மணி தன் கணவனிடம் கொண்டுவருவார்
அதையும் திறந்து கொடுத்து மகிழ்ச்சியுடன் பெருமிதமாக
தனது மீசையை முறுக்கி கொள்வார் பெரியவர்
அந்த வயதான பெண்மணியும் வெட்கப்பட்டுக்கொண்டே சமையலறை செல்வார்
இதை அந்த இளம்பெண் கவனித்து வருகிறார்
ஒருநாள் இளம்பெண் டப்பாவை தான் திறந்து கொடுப்பதாக கேட்கிறார்
வயதான பெண்மணியோ தன் கணவன் தான் திறக்க வேண்டும் என்று பிடிவாதமாக அவரிடத்தில் செல்கிறாள்
வாடிக்கையாக நடப்பது போல் நடக்கிறது
வயதான பெண்மணியும் வெட்கப்பட்டுக்கொண்டே சமையலறை வருகிறார்
இளம்பெண்ணுக்கு ஒரே சந்தேகம் இந்த டப்பாவை திறக்க அவ்வளவு கஷ்டமா என்று திறந்து பார்க்கிறார் ஈசியாக திறந்துவிடுகிறது
ஏம்மா ஈசியா தானே திறக்குது
அப்புறம் எதுக்கு அந்த அய்யாவை தொந்தரவு பண்றீங்க என்று இளம் பெண் கேட்கிறார்
குழந்தே இந்த மூடியை திறப்பது கஷ்டமில்லை
நானே திறந்துருவேன்
அவரை நான் திறக்க சொல்வதால்
என்ன விட பலசாலி ன்னு பெருமிதம் சந்தோசம்
இந்த வீட்டு ஆம்பிளைனு கெத்து
இன்னும் இந்த வீட்டுக்கு உபயோகமாக இருக்கிறோம் என்ற மகிழ்ச்சி
நான் இன்னும் அவரைச் சார்ந்து இருக்கிறேன் என்ற ஆளுமை
திருமண வாழ்க்கையின் அடிப்படையே ஒருமித்து வாழ்வது தானே
இன்னும் வாழப்போவது கொஞ்ச நாள் தான் யாரும் யாருக்கும் பயனில்லாமல் இருக்கிறோம் என்ற எண்ணம் இல்லாமல் ஒருமித்து வாழ்வதற்கு இந்த நாடகம் என்று சிரித்தாள் 😄😄
இதை அந்த வயதானவரும் கேட்டு சிரித்துக் கொண்டார்
No comments