ஸ்டீவ் ஜாப்ஸ் பற்றி
ஸ்டீவ் ஜாப்ஸ் சிறுவனாக இருக்கையில் அவரது தந்தையுடன் வீட்டை சுற்றி வேலி அமைக்கும் பணியில் ஈடுபட்டார். ஸ்டீவ் ஜாப்ஸ் வீட்டின் பின்புறத்தில் வேலி அமைத்தார். அவரது அப்பா முன்புறத்தில் வேலி அமைத்தார்.
வேலி அமைத்ததும் அப்பா வேலியை சுற்றிப்பார்த்தார். "இது என்ன வீட்டின் பின்புறத்தில் வேலி அழகாக இல்லை? குழிகளை சரியாக மூடவில்லை? கம்பிகள் பார்க்க நன்றாக இல்லை.."
"அப்பா..இங்கே யார் வந்து பார்க்கபோகிறார்கள்? வீட்டுக்கு பின்னே இருப்பதால் யார் கண்ணுக்கும் தெரியாது" என்றார் ஜாப்ஸ்.
"ஆனால் உனக்கு தெரியும் அல்லவா? வேலை என வந்தால் ஏனோ தானோ என அதை செய்யவே கூடாது. யார் பார்க்கிறார்கள், பார்க்கவில்லை என்பது முக்கியம் இல்லை. வேலியை அகற்றி மீண்டும் சரியாக மாட்டு" என்றார் அப்பா.
சில பத்தாண்டுகள் கழிந்தன
ஆப்பிள் மேக் கணிணியின் சர்க்க்யூட் போர்டை அதன் எஞ்சினியர்கள் வடிவமைத்து ஜாப்ஸிடம் கொன்டுபோய் கொடுத்தார்கள்.
"இது என்ன பார்க்க அழகா இல்லை?" என்றார் ஜாப்ஸ். "இதன் சிப்ஸை வரிசையாக நிறுத்தி சர்க்யூட் போர்டை பார்க்க கண்ணுக்கு லட்சணமா இருக்கும்படி வடிவமையுங்கள்"
"வெட்டி வேலை. இந்த போர்ட் கணிணிக்கு உள்ளே தானே தானே இருக்கும்? இதை யார் பார்க்க போகிறார்கள்? " என்றார் தலைமை எஞ்சினியர்.
தன் தந்தையின் அதே வார்த்தைகளை பயன்படுத்தினார் ஜாப்ஸ்...
"நீங்கள் பார்ப்பீர்கள் அல்லவா? வேலை என வந்தால் ஏனோ தானோ என செய்யகூடாது. எல்லாவாற்றையும் கழட்டி சரியாக மாட்டிவிட்டு , உங்கள் வேலையில் உங்களுக்கே திருப்தி வந்தால் உங்கள் ஐவரின் கையெழுத்தையும் அந்த போர்டில் பொறித்து வையுங்கள்" என்றார் ஜாப்ஸ்.
ஒரு ஆல்பாவால் தான் இன்னொரு ஆல்பாவை உருவாக்க முடியும்
No comments