சிரிக்க மட்டும் அல்ல....., சிந்திக்கவும்கூடத்தான்
🤔😷🤔😷🤔😷🤔😷🤔😷🤔😷
✓ *மனைவிக்கு திடீர் சந்தேகம் வந்தது.. தன்னுடைய கணவனுக்கு காது கேட்கவில்லையோ என்று? ஆனால்... இதை கணவனிடம் நேரடியாக கேட்க அவருக்கு தயக்கம். இந்த விஷயத்தை அவரின் உறவுக்கார டாக்டருக்கு தெளிவாக விளக்கி ஒரு கடிதம் எழுதினார்....*
*டாக்டரிடம் இருந்து வந்த பதிலில்...*
🔸 *இருபது அடி தூரத்தில் இருந்து கணவரிடம் ஏதாவது பேசிப் பாருங்கள்,... கணவரின் காதில் விழவில்லை எனில்.... சற்று நெருங்கி பதினைந்து அடி தூரத்தில் இருந்துப் பேசுங்கள்.*
🔸 *பின் பத்து, ஐந்து இப்படி குறைத்துக் கொண்டே நெருங்கிச் சென்று பேசுங்கள்...*
*எத்தனை அடி தூரத்தில் இருந்து பேசினால் கணவருக்கு காது கேட்கவில்லை எனத் தெரிந்தால் அதற்கேற்றபடி சிகிச்சை அளிக்கலாம்" என்றிருந்தது.*
*அதைக் கேட்டவுடன் மனைவிக்கு ஒரே குஷி.*
*அடுத்தநாள் வீட்டு வாசலில் இருந்தபடியே உள்ளிருந்த கணவரிடம்...*
*இன்று மகனுக்கு பள்ளி கட்டணம் கட்டியாச்சானு? கேட்டாள்.*
*பதில் எதுவும் இல்லை...*
*பின் வீட்டு வரவேற்பறையில் இருந்து அதே கேள்வியைக் கேட்டாள். அதற்கும் பதில் இல்லை,*
*ஹாலில் இருந்து கேட்டாள், சமையலறை வாசலில் இருந்தும் மீண்டும் மீண்டும் அதே கேள்வியைக் கேட்டாள்.*
*கணவரிடமிருந்து பதிலே இல்லை.*
*போச்சு இரண்டு ஸ்பீக்கரும் அவுட் ஆகிவிட்டதுபோல என்று மனதில் கன்ஃபர்ம் செய்து விட்டார்.*
*கடைசி வாய்ப்பாக கணவனின் காது அருகே சென்றுச் சத்தமாக....*
*"இன்னைக்கு பையனுக்கு Fees கட்டியாச்சானு?" கேட்டாள்.*
*காதில் ஏதோ குண்டு வெடித்தது போல் இருக்கவே... அவளின் கணவன் அவளை கோபமாக திரும்பிப் பார்த்து,*
*”ஏன்டீ இப்படி கத்துற, நீ வாசல் கேட்டிலிருந்து , வரவேற்பறையில் இருந்து, ஹாலில் இருந்து, சமைலறை வாசலில் இருந்து கேட்க., கேட்க.. நானும் கட்டியாச்சு கட்டியாச்சுனு சொல்லிக்கிட்டே இருக்கேன்..,*
*அது உன் காதில் விழவில்லையா..........?*
*காதுல என்ன பஞ்சு மூட்டையா வைச்சிருக்க...?*
*என பொரிந்துத் தள்ளிவிட்டான்...*
*மனைவி அதிர்ச்சியில் உறைந்துபோய் நின்றாள்........*
*தவறு தன்னிடம் தானா............?*
*கதையின் நீதி:-*
*இப்படித்தான் பலர் பிரச்சனையை நம்மிடம் வைத்துக் கொண்டு... அது பிறரிடம் இருப்பதாக நினைத்து வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம்…*
*என்ன விசித்திரம்!!!*
*இந்தப் பதிவு சிரிக்க மட்டும் அல்ல....., சிந்திக்கவும்கூடத்தான்...........*✓
🤔😷🤔😷🤔😷🤔😷🤔😷🤔😷
No comments