Just relax

Just relax
Just Relax__keep deep breath..

நமது மனசு

 ஒரு அரசனுக்கு திடீரென இரண்டு கண்களும் குருடாகிவிடுகிறது.. அதை குணப்படுத்த மலைஉச்சியில் உள்ள சஞ்சீவிமலையில் உள்ள மூலிகையை கொண்டு வந்து பிழிந்தால் தான் முடியும்.. அதற்கு மலையடிவாரத்தில் உள்ள தேவதை வழிகாட்டினால்தான முடியும்..

அந்த அரசனுக்கு மூன்று குமாரர்கள்..

அதில் முதலாமவன் நான் கொண்டுவருகிறேன் என கிளம்புகிறான்.. தேவதை வழிகாட்ட ஒர் நிபந்தனை விதிக்கிறது..

”நான் உன் பின்னால் வருவேன்.. நான் இடது பக்கம் திரும்பு என்றால் இடது பக்கம் திரும்ப வேண்டும்.. வலது பக்கம் திரும்பவேண்டும். வலதுபக்கம் திரும்ப வேண்டும்… நீ நடப்பதை நிறுத்தக்கூடாது.. நடந்து கொண்டே இருக்கவேண்டும்.. எது நடந்தாலும் பின்னால் திரும்பிக்க பார்க்ககூடாது” எனகிறது..

முதாலாமவன் நடந்து செல்ல தேவதை வழிகாட்டிச்சென்றது. திடீரென பின்னால் வரும் தேவதையின் சலங்கை ஒலி கேட்கவில்லை.. என்னாயிற்று என தன்னையறியாமல் முதலாமவன் திரும்பி பார்க்கிறான்.. நிபந்தனையை மீறிவிட்டான்.. கற்சிலையாகி விடுகிறான்.

அடுத்து இரண்டாமவன் கிளம்புகிறான்.. கிட்டதட்ட நிபந்னைகளுக்கு உட்பட்டு பாதிதூரம் வந்துவிடுகிறான். தீடீரென சிரிப்பு ஒலிகேட்கிறது. ஆர்வ மிகுதியால் திரும்பிப் பார்க்கிறான்.. அவனும் கற்சிலையாகி விடுகிறான்..

மூன்றாமவன் வருகிறான்.

இவனுக்கும் இதே நிபந்தனையுடன் தேவதை முன் வருகிறது.. இவனும் பின் வரும் சத்தம் நின்று போனாலும் முன்னே செல்கிறான்.. பின்னால் அலறல் சத்தம்.. சிரிப்பொலி.. இவைகளுக்கெல்லாம் திரும்பாமல் முன்னே செல்கிறான் வெற்றியும் பெற்று மூலிகையும் கைப்பற்றுகிறான்..

நீதி: பின்னால் வரும் தேவதைதான் நமது மனசு. நிபந்தனையை விதித்துவிட்டு செயல் உறுதியை தடுக்க எல்லா முயற்ச்சியையும் செய்யும். அதை புறக்கணிப்பதில் நம் வெற்றி அடங்கி உள்ளது.



No comments