உன் வாழ்வு யாருக்கானதாக இருக்கிறது
*_நீ அனுபவிக்கும் வாழ்வை யாரோ ஒத்துக்கொள்ளாவிட்டால் உனக்கு என்ன ??_*
நல்ல வாழ்கிறாய்,
நல்லதே நடந்துகொண்டே இருக்கிறது ..
அதை பிறர் அங்கீகரிக்க தேவையில்லை ..
அவர்களுக்கு ஆனா நல்லதையும் நீ ஒத்துக்கொள்ளவும் தேவையில்லை ..
நீ நல்ல இருப்பதை நீ உணர்ந்து அனுபவித்து வாழ்தலே போதும் ..
யரோ ஏற்றுக்கொள்ளும் நல்லதை தான் நீ ஏற்றுக்கொண்டு வாழும் என்றால் ..
உன் வாழ்வு, யாருக்காகவோ இருக்குமே ஒழிய !!
உனக்கானதாக இருக்காது ..
உன் வாழ்க்கையை நீ வாழு ..
உனக்கு பிடித்தபடி வாழு ..
உன்னை நீயே நோக்கி அங்கீகரித்து வாழு ..
உனக்கான வாழ்வை ..
உனக்கு பிடித்தமான சூழலை ..
உனக்கு பிடித்தமான விதத்தில் ..
உன்னை உன் உள்ளும் புறமும் பிடித்தவன் வாழ்வித்து கொண்டு இருக்கிறான் ..
உன் வாழ்வு யாருடனும் ஒப்பிடமுடியாதபடி
தனித்துவமாக உனக்காகவே வடிவமைத்து கொடுத்து இருக்கிறான் ..
அவன் உனக்கு என்று அருளியதை ..
உன்னை போல அனுபவித்து வாழ இங்கே யாருமில்லை ..
நீ நீயாக வாழ
உன் பிறவியின் பரிபூரணத்தை அனுபவிப்பாய் ..
பிறவிசூழ்ச்சியில் இருந்தும் விடுபடுவாய் ..
நீ வாழு ..
உன்னை நீயாக வடிவமைத்தவன் கருணை என்று உனக்காக, உன்னோடு என்றும் உண்டு ..
No comments