Just relax

Just relax
Just Relax__keep deep breath..

என்றும் 16 - இளமையான தோற்றம் பெற எளிய டிப்ஸ்

FILE
இக்காலத்தில் 45 வயது முடிந்தவர்களைகூட அங்கிள், ஆன்ட்டி என கூப்பிட்டால் அது அவர்களுக்கு மன வேதனையை ஏற்படுத்திவிடுகிறது. வயதை ஒரு காரணாமாக காட்டி ஒருவரின் முதுமையை நாசூக்காக வெளிக்கொணரும் சக்தி "அங்கிள், ஆன்ட்டி" என்னும் சொற்களுக்கு உண்டு.

இத்தகைய "அங்கிள், ஆன்ட்டி" என்னும் சொற்கள் நம்மை சுருக்கென்று தாக்கிவிடுவதற்கு முன்பாகவே சிறிது சுதாரித்து கொள்வது நல்லது.

முதலில் "முதுமை" மற்றும் "முதுமையான தோற்றம்" என்னும் இரு வார்த்தைகளில் இருக்கும் வேற்றுமையை உணரவேண்டும். முதுமை என்பது வயது அதிகரிப்பதால் ஏற்படும் உடல் மற்றும் மனரீதியான மாற்றங்களை குறிக்கும். முதுமையான தோற்றம் என்பது நமது உடல் மற்றும் மனம் நமது கட்டுப்பாட்டில் இல்லாதபோது ஏற்படுவது.

மனதிற்கும் உடலுக்கும் சரியான ஓய்வு, முறையான பராமரிப்பு ஆகியவை இல்லையென்றால் உங்கள் வயது 20 ஆக இருந்தாலும் தோற்றம் 40 வயதுபோல் இருக்கும்.

இத்தகைய சிக்கல்களில் மாட்டிக்கொள்ளாமல், முதுமையான தோற்றத்தை சில ஆண்டுகள் வரை தள்ளிப்போட குறிப்பிடப்பட்டிருக்கும் எளிமையான டிப்ஸை பின்பற்றுங்கள்.
  • நிறைய தண்ணீர் குடியுங்கள்.

  • சமைத்த உணவை விட காய்கறிகள் மற்றும் பழங்களை பச்சையாக உண்ணுங்கள். இப்படி செய்தால் பழங்கள் மற்றும் காய்களின் சத்துக்கள் முழமையாக கிடைக்கும்.

  • சமையலுக்கு கொழுப்பு சத்து இல்லாத ஆலிவ் எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.

  • புரத சத்துக்கள் நிறைந்த உணவுகளை சாப்பிடுங்கள்.

  • வெயிலிருந்து உங்கள் சருமம், கூந்தலை பாதுகாத்துக்கொள்ள சன் ஸ்க்ரீன் மற்றும் ஹேர் கண்டிஷனரை உபயோகியுங்கள்.

  • நன்றாக தூங்குங்கள்.

  • சரியான அளவு உடற்பயிற்சி செய்யுங்கள்.

  • உங்கள் சருமதிற்கேற்ற லோஷன்களை கை கால்களில் தினமும் தடவிக்கொள்ளுங்கள்.

  • முடிந்தவரை அதிக மேக் அப் போடுவதை தவிருங்கள்.

  • மனதை சந்தோஷமாக வைத்துக்கொள்ளுங்கள்.

  • ஏதாவது ஒரு பொழுதுபோக்கில் ஈடுப்படுங்கள்.

  • இரவில் சீக்கிரமாக உறங்கி காலையில் விடியலுக்கு முன் எழுங்கள்.

  • தியானம் செய்யுங்கள்.

  • குற்ற உணர்வுகளை தூக்கி எறியுங்கள்.

  • மனம்விட்டு சிரியுங்கள்
thanks to:http://tamil.webdunia.com/

No comments