Just relax

Just relax
Just Relax__keep deep breath..

வீட்டின் உட்புற அழகிற்கு....

ஒரு வீடு சிறியதாக இருந்தாலும், பெரியதாக இருந்தாலும், அதற்கு கூடுதல் அழகு சேர்ப்பது அதன் உட்புற அலங்கார அமைப்புதான்.வீட்டின் உட்புறத்தை அழகுபடுத்த பெருமளவு பணம் செலவிட முடியாதவர்கள், மிக எளிமையான வழியில் வீட்டை பிறர் கவனத்தை ஈர்க்கும் விதத்தில் அழகுபடுத்தலாம்.

இதற்கு நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் சிறு சிறு தொட்டிகளில் அழகான செடிகளை வாங்கி, வீட்டில் ஆங்காங்கே வைத்துவிட வேண்டும். இவ்வாறு செய்தால் உங்கள் வீட்டின் அழகு பன்மடங்கு அதிகரிக்கும். வீட்டிற்கு வருகை தரும் விருந்தினர்கள் கண்டிப்பாக ஏதோ ஒரு புதிய மாற்றத்தை உணர்வதாக கூறுவார்கள்.

இதற்காக நீங்கள் பெரிய முயற்சிகள் எடுக்க தேவையில்லை என்றாலும் சில விஷயங்களில் கவனம் தேவை. நீங்கள் வைத்திருக்கும் செடிகளுக்கு சரியான அளவில் சூரிய வெளிச்சம் மற்றும் தண்ணீர் கிடைகிறதா என உறுதிசெய்வது அவசியம். 

சூரிய கதிர்கள் நேரடியாக செடிகளின் மீது படாமல் இருப்பதால், மிதமான அளவில் தண்ணீரை செடிகளின் மீது தெளித்தால் அதுவே போதுமானது. பூச்செடிகளை விட க்ரோடன்ஸ் , சப்பாத்தி கள்ளி, கற்றாழை ஆகிய வகைகளை தேர்வு செய்து, விதவிதமான பூத்தொட்டிகளில் வைத்து அழகு சேர்க்கலாம்.

வீட்டின் உட்புறத்தை அதிகம் செலவழிக்காமல் பொலிவு படுத்தும் இந்த எளிய முறையை நீங்களும் முயற்சித்து பாருங்கள். 

No comments