Just relax

Just relax
Just Relax__keep deep breath..

கண்களுக்கு சில அத்தியாவசிய எளிய பயிற்சிகள்...

யோகா, நீச்சல், ஜாக்கிங் போன்ற பல வகை உடற்பயிற்சிகள் எவ்வளவு உடலுக்கு முக்கியமோ அதே அளவு பயிற்சி நம் கண்களுக்கும் அவசியமானது. கண்களை ஆரோக்கியமாக வைத்து‌க்கொ‌ள்வது கண்களு‌க்கு ஏற்படும் களைப்புகளை குறைக்கும். கண்களில் எந்த பிரச்சனையும் வராமலிருப்பதற்கும் வழிவகுக்கும். 

கண்களுக்கு நாம் தர வேண்டிய அத்தியாவசிய பயிற்சி முறைகள்:
FILE
1. ஒரு நாற்காலியில் வசதியாக உட்கார்ந்து, உள்ளங்கையை தேய்த்து வெப்பம் உண்டான பின் கண்களை உள்ளங்கையால் மூடிகொள்ளவும். அவ்வாறு செய்யும் போது கருவிழிகளின் மேல் அதிகம் அழுத்த வேண்டாம். மூக்கையும் மூடிக்கொள்ளும்படியாக முக்கோன வாக்கில் கைகள் அமைய வேண்டும்.

கண்களை மூடும் போது இருளை உணர்ந்து, அந்த நேரம் பல மகிழ்ச்சியான சம்பவங்களை நினைத்து, மூச்சை உள்ளே இழுத்து, மெதுவாக விட வேண்டும். இதை போல் 3 நிமிடங்களுக்கு ஒருமுறை செய்தல் வேண்டும்.

2. கண்களை 3-5 விநாடிகள் இறுக்கமாக மூடிகொண்டும், பின் 3-5 விநாடிகள் திறந்தும் வைத்திருத்தல் வேண்டும். இதனை 7 அல்லது 8 முறை செய்யவும்.

3. கண் மசாஜ்: 

FILE
வெப்பம் மற்றும் குளிர்ந்த நீர் மசாஜ்: 
குளிர்ந்த மற்றும் சூடான நீரில் துண்டை நினைத்து புருவம், மூடிய இமைகள், மற்றும் கன்னங்கள் மீது அழுத்தவும். இரண்டையும் மாற்றி மாற்றி செய்யவும். ஆனால் குளிர்ந்த நீரில் அழுத்துவதை கடைசியாக அமையும்படி செய்யவும்.

முழு முக மசாஜ்: 
சூடான நீரில் ஒரு துண்டை நனைத்து, கண்களை தவிர, கழுத்து, தலை மற்றும் கன்னங்கள் என அனைத்து பகுதிகளிலும், தேய்த்தல் வேண்டும். பின்னர், விரல்களால் மெதுவாக நெற்றி மற்றும் மூடிய கண்களை மசாஜ் செய்யவும்.

கண்ணிமை மசாஜ்: 
கண்களை மூடி 1-2 நிமிடங்கள் விரல்களால் வட்ட இயக்கங்களில் மசாஜ் செய்யவும். பின் கைகளை கழுவி சுத்தமாகவும், அதிகமாக அழுத்தாமல் சாதாரணமாக அழுத்துவது அவசியம்.

FILE
4. மெதுவாக இரண்டு கைகளால் மூன்று விரல்கள் கொண்டு மேல் கண் இமைகள் அழுத்தவும். பின்னர், 1-2 வினாடிகளில் அப்படியே அழுத்தியவாறு இருந்து பின் விடுவிக்கவும். இதை தொடர்ந்து 5 முறை செய்யவும்.

5. அமைதியாக உட்கார்ந்து, கண்களை இடதுபுறமாகவும் பின் வலதுபுறமாகவும் சுழற்ற வேண்டும். 5 முறை செய்யவும், அதன் இடையே ஒவ்வொரு முறையும் கண்களை சிமிட்டவும். 

FILE
6. 10-15 வினாடிகள் ஒரு தொலைதூர பொருளைப் (150 அடி அல்லது 50 மீட்டர் மேல்) பார்க்கவும். பின்னர், மெதுவாக கண்களை அருகில் உள்ள பொருள் மீது ( 30 அடி அல்லது 10 மீட்டர் தூரத்தில்) 10-15 வினாடிகள் நோக்கவும். மீண்டும் தொலைதூர பொருளை பார்க்கவும். இதனை 5 முறை செய்யவும்.


FILE

7. முழங்கை நீட்டி ஒரு பென்சில் வைத்து, மூக்கின் முன் மெதுவாக நகர்த்தி வரவும். கண்களை அந்த பென்சிலைப் பார்த்தபடியே நகர்த்துவதை கவனம் செலுத்தவும். இதனை 10 முறை செய்யவும்.



FILE

8. எதிரில் உள்ள சுவரை பார்த்தப்படியே உங்கள் கண்களால் எழுத முயற்சிக்கவும் அதுவும் தலையை நகர்த்தாமல் எழுத வேண்டும். இது முதலில் கஷ்டமாக இருக்கும் மீண்டும் மீண்டும் செய்தால், பின் பழகிவிடும்.


9. தலையை அசக்காமல் மேலும் கீழுமாக பார்க்கவும். இதனை 8 முறை செய்தல் வேண்டும். பின்னர் இடது வலது என அசைக்கவும். இதையும் 8 முறை செய்தல் வேண்டும். கண்களை அதன் போக்கில் போகும் போது அதனை கட்டாயப்படுத்தி, நம் திசையில் பார்ப்பது தவறு. அப்படி செய்தல் பார்வை மோசமாகிவிடும்.

10. எப்போதும் கண் உடற்பயிற்சியை முடிக்கும் போது, உள்ளங்கையால் தடவி முடிப்பது நல்லது. நீண்ட நேரம் தொடர்ந்து பயிற்சிகள் செய்வதை விட, தினமும் சிறிது நேரம் செய்தல் நல்லது. இந்த மாதிரியான பயிற்சிகள் குறிப்பாக கம்ப்யூட்டர் முன் வேலை செய்வோருக்கு சிறந்ததாக இருக்கும்.

எளிதாக, 

தினம் அலுவலகத்தில் உங்கள் கம்ப்யூட்டர் ஓவ்வொறு செயலாக்கத்திற்கும் சில நொடிகள் பிடிக்கும், அப்போது உங்கள் கண்களுக்கு மேல குறிப்பிட்டுள்ள பயிற்சிகளையோ அல்லது தூரத்தில் உள்ள விஷயங்களை நோக்கி பார்க்கவும்.

No comments