Just relax

Just relax
Just Relax__keep deep breath..

கடவுள் நம்முள் இருக்கிறார்!!! ஜென் கதைகள்

இமய மலையில் ஜென் குரு ஒருவர் வாழ்ந்து வந்தார். அவரைக் காண ஒரு மடாலயத்தின் தலைவர் சென்றார். அப்போது அவரிடம் "நான் ஒரு புகழ் பெற்ற மடாலயம் ஒன்றை நடத்தி வருகிறேன்" என்று கூறினார். குருவும் தன் மௌனத்தை கலைக்காமல் அவர் கூறியதை கேட்டு தலை அசைத்தார்.
மேலும் அந்த தலைவர் குருவிடம் "என் மனம் தற்போது பெரும் குழப்பத்தில் உள்ளது. அதற்கான விடையை அறியவே உங்களைக் காண வந்தேன்" என்றும் கூறினான்.

குரு அதற்கு "என்ன குழப்பம்?" என்று கேட்டார். தலைவர் குருவிடம் "என் மடாலயம் மிகவும் அமைதியாக, பழைமை நிறைந்த புனிதமான இறை வழிபாட்டை மேற்கொண்டு வந்தது. இதனை அறிந்து உலகின் பல பகுதிகளிலிருந்தும், இளைஞர்கள் வந்து தங்கி, பாடத்தை கற்றுக் கொண்டு செல்வர். ஆனால் இப்போதோ, யாரும் வருவதில்லை. இதற்கு காரணம் என்னவென்று தெரியவில்லை. நீங்கள் தான் அதற்கான காரணத்தை சொல்ல வேண்டும்" என்று கூறினார்.

அவ்வாறு வருத்தத்துடன் சொல்லும் போது, அவர்து குரலில் வேதனை தெரிந்தது. அதன் பின் குரு தலைவரிடம், "இதற்கு அறியாமை தான் காரணம்" என்று சொன்னார். "அறியாமையா?" என்று கேட்டார் தலைவர்.
அதற்கு "ஆம், உங்கள் மத்தியில் தேவதூதர் ஒருவர் உள்ளார். அவரை நீங்கள் உணரவில்லை, அதனால் தான் இந்த குழப்பம்" என்று கூறி அனுப்பி வைத்தார்.
அவரும் யாராக இருக்க முடியும் என்று யோசித்துக் கொண்டே சென்றார். பின் தன் மடாலயத்தில் இருக்கும் சீடர்களிடம் நடந்ததை சொன்னார். அவர்களும் யாரோ ஒருவர் தான் இங்கு தேவதூதர் என்பதை நினைத்து, ஒருவரை ஒருவர் மிகவும் மரியாதையுடன் நடத்தினார்கள்.

பின் சிறிது மாதங்கள் கழித்து, அவரது மடாலயத்தில் கூட்டம் குவிந்தது. ஏனெனில் அவர்கள் இதுவரை எதையும் விரும்பி செய்யாமல், கடமைக்காக செய்ததால், யாரும் வரவில்லை. இப்போது அவர்கள் அனைவருக்கும் மரியாதைக் கொடுத்து, அனைத்தையும் மரியாதையோடு நடத்தினர்.
இவை அனைத்தையும் கண்டப் பிறகு தான் தலைவருக்கு, துறவி சொன்னது புரிந்தது. அப்போது தான் அவருக்கு தேவ தூதர் வேறு எங்கும் இல்லை, அவரவர் மனதில் தான் இருக்கிறார். அதை நாம் உணர்ந்து, நம்மைப் போல மற்றவரையும் நேசித்தால், இறைவனை உணர முடியும் என்பது நன்கு புரிகிறது.

No comments