ஜென் கதைகள்
'ஜென்' ஒரு கொள்கையோ, கோட்பாடோ அல்ல, அது ஒரு த்த்துவம் கூட அல்ல! உலகத்தின் சகல த்த்துவ ஞானச் சங்கிலிகளைத் தகர்த்தெறிந்து மனிதனுக்குப் பரிபூரண விடுதலையை அளிப்பது ஜென்! -
'ஜென்' ஒரு கொள்கையோ, கோட்பாடோ அல்ல, அது ஒரு த்த்துவம் கூட அல்ல!
உலகத்தின் சகல த்த்துவ ஞானச் சங்கிலிகளைத் தகர்த்தெறிந்து மனிதனுக்குப் பரிபூரண விடுதலையை அளிப்பது ஜென்! - See more at: http://www.noolulagam.com/tamil-book/4184/zen-kadhaigal-book-type-kathaigal-by-kavignar-puviarasu/#sthash.nok7HRPY.dpuf

தடை
ஓவியரான ஒரு ஜென் குரு தன சீடரைப் பக்கத்தில் வைத்துக் கொண்டு ஒரு ஓவியம் தீட்டிக் கொண்டிருந்தார்.சீடரும் அவ்வப்போது ஓவியத்தை விமரிசித்துக் கொண்டிருந்தார்.குரு எவ்வளவோ முயற்சி செய்தும் ஓவியம் சரியாக வரவில்லை.சீடரும் சரியில்லை என்று சொல்லிக் கொண்டிருந்தார்.அப்போது வண்ணப்பொடிகள் தீரும் நிலையில் இருந்ததால் குரு சீடரை வண்ணப்பொடிகள் வாங்கி வர அனுப்பினார்.சீடர் வெளியே சென்றார்.குருவும் இருக்கும் வண்ணங்களைக் கொண்டு ஓவியத்தை மாற்றிக் கொண்டிருந்தார்.வெளியே போய் வந்த சீடர் வந்ததும் அசந்து விட்டார்.குரு மிக அற்புதமாக ஓவியத்தை முடித்து வைத்திருந்தார்.ஆர்வத்துடன் குருவிடம் அது எப்படி சாத்த்யமாயிற்று என்று கேட்க குரு சொன்னார்,”பக்கத்தில் ஒரு ஆள் இருந்தாலே ஒரு படைப்பு ஒழுங்காக உருவாகாது.உள்ளார்ந்த அமைதி உண்டாகாது.நீ அருகில் இருக்கிறாய் என்ற உறுத்தல்தான் ஓவியத்தைக் கெடுத்தது.நீ வெளியே சென்றதும் எனக்கு தடை நீங்கியது.ஓவியமும் ஒழுங்காக உருவானது.சிறப்பாக அமைய வேண்டும் என்ற நினைப்பே சிறப்பாக இல்லையோ என்ற குறைபாட்டை ஏற்படுத்தி விடும்..குறைபாடு என்ற நினைவே ஒரு குறைபாடுதான்.அது இருக்கும்வரை முழுமைத்தன்மை வராது.குறை மனதோடு எதையும் அணுகக்கூடாது.இயல்பாகச் செய்யும் செயலே முழுமையைத் தரும்.”
உயிருள்ள புத்தர் .
கடுங்குளிரில் வந்த வயது முதிர்ந்த ஒருவருக்கு புத்த விஹாரத்தில் தங்க இடம் கொடுக்கப்பட்டது.அன்று இரவு கடுங்குளிர்..கிழவரால் குளிரைத் தாங்க முடியவில்லை.மரத்தால் செய்யப்பட ஒரு புத்தர் சிலையை எடுத்து அதை எரித்து குளிர் காய ஆரம்பித்தார்.மரம் எரியும் சப்தம் கேட்ட விஹாரத்தின் குரு ஓடிவந்து புத்தர் சிலை எரிவதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.கிழவரிடம்,”நீங்கள் என்ன செய்கிறீர்கள்?உங்களுக்குப் பைத்தியமா?தெய்வத்தையே எரித்து விட்டீர்களே”என்று கோபத்தில் கதறினார்.உடனே கிழவர் ஒரு குச்சியைக் கொண்டு சாம்பலைக் கிளறினார்.அவர் என்ன செய்கிறார் என்று குரு கேட்டபோது,அக்கிழவர் சொன்னார்,”நான் எலும்புகளைத் தேடுகிறேன்.நான் எரித்தது புத்தரை என்றால் எலும்புகள் இருக்க வேண்டுமே?”கோபத்துடன் குரு அவரை மடத்தை விட்டு வெளியே தள்ளி விட்டார்.மறுநாள் காலை அக்கிழவர் என்ன ஆனார் என்று வெளியே சென்று பார்த்தார்.அக்கிழவர் அங்குள்ள ஒரு மைல் கல்லின் முன் அமர்ந்து பூக்களைத் தூவி,”புத்தம் சரணம் கச்சாமி,”என்று பிரார்த்தனை செய்து கொண்டிருந்தார்.குரு அவர் அருகே சென்று,”என்ன செய்கிறீர்கள்?மைல் கல்தான் புத்தரா?”என்று கேட்டார்.கிழவர் சொன்னார், ”மரம் புத்தராகும்போது மைல் கல் புத்தராகக் கூடாதா?நேற்று நான் புத்தர் சிலையை எரித்து குளிர் காய்ந்தது,என்னுள் இருக்கும் புத்தரைக் காப்பாற்றத்தான்.அந்த மரச்சிலைகள் உயிரற்றவை.அந்த மரப் புத்தரை எரித்ததற்காக நீங்கள் உயிருள்ள புத்தரை வெளியே துரத்தி விட்டீர்களே?’பதில்
ஒரு ஊரில் இரண்டு குருகளுக்கிடையே சில பரம்பரைகளாகவே கடும் பகை இருந்தது.அந்த இருவரிடமும் இரு சிறுவர்கள் சந்தைக்குப் போவது போன்ற சில்லறை வேலைகள் பார்க்க பணியமர்த்தப் பட்டிருந்தனர். குருகள் அந்த சிறுவர்களிடம் ஒருவருக்கொருவர் பேசக்கூடாது என்று ஆணை இட்டிருந்தனர்.ஆனாலும் சிறுவர்கள் விளையாட்டுத்தனம் மிகுந்தவர்கள் ஆதலால் வழியில் சந்தித்தால் பேசிக்கொள்வர்.ஒரு நாள் ஒருவன் மற்றவனிடம்,”எங்கே போகிறாய்?”என்று கேட்டான்.அடுத்தவன் பதில் சொன்னான்,”காற்று எங்கே இழுத்து செல்கிறதோ,அங்கே,”என்றான். கேள்வி கேட்டவனுக்கு புரியவில்லை.எனவே தன குருவிடம் இதுபற்றி கேட்டான்.அவனிடம் பேசியதற்குக் கோபப்பட்ட குரு,”இருந்தாலும் இது மானப்பிரச்சினை.அவனை வெற்றி கொள்ள விடக்கூடாது.நாளை அவனிடம் இன்று போலவே பேசு. அவன் நேற்று சொன்ன பதிலையே சொல்வான்.உடனே நீ,காற்று வீசாத போதுஎன்ன செய்வாய் என்று கேள்,”என்றார்.சிறுவனும் அடுத்தவனை வழியில் பார்த்தபோது,”நீ எங்கே செல்கிறாய்?”என்று கேட்க,அவன் சொன்னான்,”கால்கள் எங்கே அழைத்து செல்கிறதோ,அங்கே,”என்றான்.இவனுக்கு சிரமமாகி விட்டது.தன தயாரான பதிலை கூற முடியவில்லை.வாட்டத்துடன் திரும்பி வந்த சிறுவனைப் பார்த்த குரு,நடந்த விபரம் கேட்க அவனும் சொன்னான்.அவர் சொன்னார்,”அந்தப் பையன் அந்தக் கூட்டத்தார்க்கே உள்ள வஞ்சகத்துடன் பேசியுள்ளான்.நாளை இதுபோல கால்கள் எங்கே போகிறதோ,அங்கே போகிறேன் என்று சொன்னால்,நீ நொண்டியாகி விட்டால் என்ன செய்வாய் என்று கேள்.அவனை நீ பேச முடியாமல் தோற்கடிக்க வேண்டும்,”
அடுத்த நாளும் இவன் அவனைப்பார்த்து எங்கே போகிறாய் என்று கேட்டவுடன் அவன் சொன்னான்,”காய்கறி வாங்க சந்தைக்கு செல்கிறேன்.” மனம் வருந்தியவனாகக் கோவிலுக்கு திரும்பிய இவன் நடந்ததைக்கூறி ”நான் ஒவ்வொரு முறையும் தயாரான பதிலுடன் செல்கிறேன்.ஆனால் அவன் ஒவ்வொரு முறையும் மாறிப் பேசுகிறான்.அந்தப் பையனின் வாயை அடைப்பது சிரமமாக இருக்கிறது,”என்றான்.
வாழ்க்கையும் இவ்வாறே ஒவ்வொரு வினாடியும் மாறிக் கொண்டே இருக்கிறது.நீங்களோ தயாரான பதிலை ஏந்திக்கொண்டு அதனிடம் செல்கிறீர்கள்.நீங்கள் உங்கள் வாழ்க்கையைத் தவற விடுவதெல்லாம் இத்தகைய தயாரான பதிலைக் கொண்டுதான்..
ஆயுட்காலம்
புத்தர் தன சீடர்களிடம்,”ஒரு மனிதனின் ஆயுட்காலம் எவ்வளவு?”என்று
கேட்டார்.ஒரு சீடர் எழுபது என்றார்,இன்னொருவர் அறுபது என்றார்,மற்றொருவர்
ஐம்பது என்றார்.அனைத்துமே தவறு என்று புத்தர் சொல்ல,சரியான விடையை அவரே
சொல்லும்படி அனைத்து சீடர்களும் வேண்டினர்.புத்தர் புன் முறுவலுடன்
சொன்னார்,”ஒரு மூச்சு விடும் நேரம்,” சீடர்கள் வியப்படைந்தனர்.”மூச்சு
விடும் நேரம் என்பது கணப் பொழுதுதானே?” என்றனர்.”உண்மை.மூச்சு விடும் நேரம்
கணப்பொழுதுதான்.ஆனால் வாழ்வு என்பது மூச்சு விடுவதில்தான் உள்ளது.ஆகவே
ஒவ்வொரு கணமாக வாழ வேண்டும்.அந்தக் கணத்தில் முழுமையாக வாழ
வேண்டும்.”என்றார் புத்தர்.
பெரும்பாலானவர்கள் கடந்த கால மகிழ்ச்சியிலே மூழ்கியிருக்கிறார்கள். பலர் எதிர் காலத்தைப் பற்றிய பயத்திலும்,கவலையிலும் வாழ்கிறார்கள். நிகழ காலம் மட்டுமே நம் ஆளுகைக்குட்பட்டது.அதை முழுமையாக வாழ வேண்டும்.
பெரும்பாலானவர்கள் கடந்த கால மகிழ்ச்சியிலே மூழ்கியிருக்கிறார்கள். பலர் எதிர் காலத்தைப் பற்றிய பயத்திலும்,கவலையிலும் வாழ்கிறார்கள். நிகழ காலம் மட்டுமே நம் ஆளுகைக்குட்பட்டது.அதை முழுமையாக வாழ வேண்டும்.
சமன் நிலை
ஒரு அரசன் தன நான்கு முக்கிய அமைச்சர்களைக் கூப்பிட்டு அவர்களில்
ஒருவரை முதல் அமைச்சராக நியமிக்கவிருப்பதாகவும் அதற்கு அவர் வைக்கும்
தேர்வில் தேற வேண்டும் என்றும் கூறினார்.தேர்வு இதுதான் கணித முறையில்
அமைக்கப்பட்ட ஒரு பூட்டை யார் விரைவில் திறக்கிறார்களோ அவரே
வெற்றியாளர்.மூன்று அமைச்சர்கள் அன்று இரவு முழுவதும் கணிதம்பற்றிய பல
புத்தகங்களைப் படித்துக் கொண்டிருந்தனர்.ஒருவர் மட்டும் நிம்மதியாகத்
தூங்கிவிட்டார்.மறுநாள் காலை அரசவையில் பூட்டு கொண்டு வரப்பட்டது.பூட்டின்
அமைப்பு எல்லோருடைய படபடப்பையும் அதிகரித்தது.ஓலைச்சுவடிகளைக் கொண்டு
வந்திருந்த மூன்று அமைச்சர்கள் அவற்றை முன்னும் பின்னும் புரட்டிப்
பார்த்தார்கள்.ஆனால் அப்பூட்டைத் திறக்கும் வழி அவர்களுக்குத்
தெரியவில்லை.இரவில் நன்கு தூங்கிய அமைச்ச மெதுவாக எழுந்து வந்து பூட்டை
நன்கு ஆராய்ந்தார்.கூர்ந்து கவனித்ததில் பூட்டு பூட்டப்படவே இல்லை என்பது
அவருக்குப் புலனாயிற்று.சாவியே இல்லாமல் எந்த கணித சூத்திரமும் இல்லாமல்
பூட்டை எளிதாக அவர் திறக்க, மன்னர் அவரையே முதல் அமைச்சர் ஆக்கினார்.
பிரச்சினையைத் தீர்க்க வேண்டுமானால்,முதலில் பிரச்சினை என்னவென்பதை நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.பிரச்சினையைப் புரிந்து கொள்ள, மனம் சமன் நிலையில் இருக்க வேண்டும்.
பிரச்சினையைத் தீர்க்க வேண்டுமானால்,முதலில் பிரச்சினை என்னவென்பதை நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.பிரச்சினையைப் புரிந்து கொள்ள, மனம் சமன் நிலையில் இருக்க வேண்டும்.
No comments