மூளையை அழகாக்கும் உடற்பயிற்ச்சி தெரியுமா
மூளையை அழகாக்கும் உடற்பயிற்ச்சி தெரியுமா?!
உடலை வருத்தி உடற்பயிற்ச்சி செஞ்சா நம்ம
வாரணம் ஆயிரம் சூர்யா மாதிரி சிக்ஸ் பேக் வரும் ஆனா விஞ்ஞானி ஐன்ஸ்டீன்
மாதிரி மூளைகூட வருமா என்ன? ம்ம்ம்…..வருமாமே?!
உண்மைதாங்க, உடற்பயிற்ச்சி செஞ்சா சிக்ஸ்
பேக் மட்டுமில்ல ஐன்ஸ்டீன் மாதிரி (புத்திசாலியான) மூளைகூட வருமாம்
அப்படின்னு நான் சொன்னா…..”ம்ம்ம் எத்தன பேரு கெளம்பி இருக்கீங்க
இப்படி”ன்னு உங்களுக்கு கேட்கத் தோனலாம். ஆனா அப்படின்னு நான் சொல்லலை!
ஆமாங்க, உடற்பயிற்ச்சி செஞ்சா உடல்
மட்டுமல்ல மூளைகூட அழகாகும்னு சமீபத்திய ஆய்வு (கள்) சொல்லுது. உதாரணமா,
விளையாட்டு வீரர்களுக்கு உடல் மட்டுமில்லாம மூளைகூட சிறப்பா இருக்குதாம்
தினமும் உடற்பயிற்ச்சி செய்யுறதுனால! அதனால நீங்க (என்னை) நம்பித்தான்
ஆகனும் வேற வழியில்ல!
மேலும் சமீபத்திய பல ஆய்வு முடிவுகளின்படி,
சரிவிகித உணவுடன் அன்றாடம் உடற்பயிற்ச்சியும் செய்து வந்தால் மூளையை
பாதுகாப்பதோடு மட்டுமல்லாமல், பலவிதமான மூளைக்கோளாறுகளால ஏற்படும்
நோய்களையும் தடுக்க முடியும்னு சொல்றாங்க விஞ்ஞானிகள்!
மொத்தத்துல உடற்பயிற்ச்சியின் பலன்களா
இந்த ஆய்வு முடிவுகள் முன்வைக்கிற செய்திகள் என்னன்னா, தினமும்
உடற்பயிற்ச்சி செய்றவங்களுக்கு……
1. எதையும் வேகமா கற்றுக்கொள்ளும் திறன்
2. அதீத நியாபக சக்தி
3. தெளிவான எண்ண ஓட்டம்
4. மூளைப் பாதிப்பு போன்ற நோய்கள்ல இருந்து சுலபமா மீண்டு வரும் திறன்
5. மன உளைச்சல் மற்றும் அறிவு மந்தம் போன்ற பிரச்சினைகள் வருவதற்கான வாய்ப்புகள் மிக மிக குறைவு
இப்படி பல நன்மைகள் தினமும் உடற்பயிற்ச்சி செய்யுறவங்களுக்கு இருக்கறதா சொல்றாங்க ஆய்வாளர்கள்.
அதெல்லாம் சரி, மூளைக்கு “வேலையே” இல்லாத
உடற்பயிற்ச்சினால மூளைக்கு பலன் இருக்கு, மூளை சிறப்பாகுதுன்னேல்லாம்
சொன்னா நம்புறமாதிரியா இருக்கு ம்ம்ம்? இதே கேள்விதாங்க எனக்கும், ஆனா
அதுக்கும் பதில் வச்சிருக்காங்களே இந்த விஞ்ஞானிங்க! வாங்க என்னன்னு
பார்ப்போம்…..
உடல்ல தினமும் ஏற்படற “பசி” மாதிரி
உடற்பயிற்ச்சிங்கிறதும் உடலுக்கு ஒரு வகையான அழுத்தம்தானாம்! ஆனா பாருங்க
சில நேரங்கள்ல அழுத்தங்கள்கூட உடலுக்கு நல்லதுதானாம். அதாங்க,
உடற்பயிற்ச்சி!
மூளையைப் பாதுகாக்கும் உடற்பயிற்ச்சி!
உடற்பயிற்ச்சி செய்யுறதுனால உடலில் உள்ள
சக்தியெல்லாம் விரையமாகும். இது உடலுக்கு அபாயமானது. அதனால உடல் என்ன
பண்ணும்னா முதல்ல உடலுக்கு மிக முக்கியமான உறுப்பான “மூளை”யைத்தான்
பாதுகாக்குமாம். அதாவது, உடலில் பிற அனுக்களைப் (செல்களை) போலல்லாது ,
சக்தி விரையமாவதால் முதலில் பாதிக்கப்படுபவை நரம்புகள்தானாம்! ஆக நம் உடல்
இயங்கு அமைப்பு முறையின்படி உடல் சக்தி விரையத்திற்கு உள்ளாகும்போது
முதலில் பாதுகாக்கப்படுவது மூளைதானாம்! ஆஹா அப்படியா……சொல்லவே இல்ல?!
ஆக, சக்தி விரையத்தினால் ஏற்படும் உடல்
மாற்றங்களினால் மூளை பாதிக்கப்படாமல் பாதுகாக்கும் உடலின் இயற்கையான இயங்கு
தன்மையினால், உடற்பயிற்ச்சியானது ஒரு லேசான அழுத்தம் போல மூளையின்
வளர்ச்சிக்கும், பாதுகாப்புக்கும் வித்திடுகிறது அப்படின்னு சொல்றாரு இந்த
ஆய்வை மேற்கொண்ட கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கார்ல் காட்மேன்!
அதுமட்டுமில்லாம, உடற்பயிற்ச்சியானது
மூளையை பாதுகாப்பதோடு மூளையின் சீரிய செயல்பாட்டுக்கும் மிக
அத்தியாவசியமாகிறதுன்னு சொல்றாரு காட்மேன்! சும்மா சொல்லிட்டா நாங்க
ஒத்துக்கனுமா? வெவரமாச் சொல்லும் ஓய், அப்படின்னு கேட்டதுக்கு அவரு
சொல்றாரு…..
உடற்பயிற்ச்சி எப்படி மூளையின் செயல்பாட்டை அதிகரிக்கிறது?
நாம சும்மா உக்காந்திருக்கும்போது,
படுத்திருக்கும்போதுகூட நம்ம கை கால்கள் எந்த கோணத்தில் இருக்கின்றன
அப்படின்னு உடனுக்குடன் மூளைக்குத் தகவல் சென்றுவிடுமாம். யப்பா…! ஆனா,
நாம எழுந்து நின்னு நடக்க ஆரம்பிச்சா இந்த மாதிரி தகவல்கள அதிகப்படியா
மூளைக்கு அனுப்பிக்கிட்டே இருக்குமாம் நம்ம உடல்!
இதுவே நாம தொடர்ந்து உடற்பயிற்ச்சி செய்ய
ஆரம்பிச்சிட்டா தகவல் அனுப்புறதோட “க்ரோத் ஃபேக்டர்ஸ்” (Growth factors)
அப்படிங்கிற உடல் வளர்ச்சிக்கான அமிலங்கள சுரக்க உத்தரவு போட்டுவிடுமாம்
நம் மூளை. அட….இது நல்லாருக்கே!
க்ரோத் ஃபேக்டர்ஸ் எல்லாம் நரம்புகளுக்கு
நம்ம காம்ளான் மாதிரியாம். அதனால, நரம்புகள் எல்லாம் திடமா, உறுதியா ஆவதோடு
மட்டுமில்லாம நம்மளோட கற்கும் திறனும் மேம்படுமாம். அதுமட்டுமில்லாம,
க்ரோத் ஃபேக்டர்ஸ் இருந்தா நரம்புகள் வளர்வதோடு மட்டுமல்லாமல் புதிய
நரம்புகள் பிறந்தும் பழைய நரம்புகள் உதிர்ந்தும் மூளையின்
நரம்புத்தொடர்புகளை வலுவடையுமாம்! அதனால, சுற்றியுள்ள ரத்த நாளங்கள்
நரம்புகளுக்கு போஷாக்குகள் மற்றும் க்லுக்கோஸை அள்ளி வழங்குமாம்! இது
எல்லாம் சேர்ந்து நம் சிந்திக்கும், கற்கும் மற்றும் நியாபகத் திறன்களை
பெரிதும் மேம்படுத்துமாம். இது பரவாயில்லையே….!
இதையெல்லாம் படிச்சிட்டு, அர்னால்டு
பாடியும் ஐன்ஸ்டீன் மூளையும் வர வைக்கிறதுக்காக, “ஏய் சிங்கம்
போல……அப்படின்னு ஒரு வேகத்துல உடற்பயிற்ச்சி செய்ய கிளம்பிட்ட
நண்பர்களுக்கு உடனே ஒரு சந்தேகம் வருமே……என்ன வருதா?ம்ம்ம்…எனக்குத்
தெரியும் அது வரும்னு. ஆமா என்ன சந்தேகம் அது….?
அதாங்க, உடற்பயிற்ச்சிய எப்படி பண்றதுன்னு!
அதாவது, ஒரு நாளைக்கு ஒரு முறை பண்ணனுமா, ஒரு வாரத்துல நாலு நாள்
பண்ணனுமா? அப்புறம் ஒவ்வொரு முறையும் உடற்பயிற்ச்சி பண்ணும்போது எவ்வளவு
நேரம் பண்ணனும்? ஒரு மணி நேரம்? இல்ல…அரை மணி நேரம்? இப்படி எல்லாம்
சேர்ந்து ஒரே குழப்பமா இருக்குமே?
சரி, ஒன்னும் கவலைப்படாதீங்க. இந்த ஆய்வு
முடிவுகளின்படி தினமும் உடற்பயிற்ச்சி செய்ய முடியலைன்னாலும், ஒன்னு விட்டு
ஒரு நாளைக்கு (வாரத்துல 4 நாளுங்க!) அரை மணி நேரம், நல்ல புள்ளயா
உடற்பயிற்ச்சி செஞ்சா போதுமாமுங்க! இந்த ஆய்வுல படிச்ச மாதிரி எல்லாப்
பலன்களையும் அனுபவிக்கலாமாம்!
என்ன இப்போ சந்தோஷமா? சரி, எல்லாரும்
உடற்பயிற்ச்சி செஞ்சுட்டு தலா ஒரு போட்டோ ஓன்னு எனக்கு அனுப்பி
வைங்க…..ம்ம்ம் எதுக்கா? சிக்ஸ் பேக்கா இல்ல எய்ட் பேக்கான்னு செக்கப்
பண்ணத்தான்!? ஹி ஹி…சும்மா தமாசு!
உடற்பயிற்ச்சி பற்றிய மேலும் பல
சுவாரசியமான தகவல்களும் இருக்கு…..எங்கேன்னு கேக்குறீங்களா? அடுத்த பதிவுல!
அதுவரைக்கும் காத்திருங்க. இப்போ நான் கெளம்புறேன். எங்கேன்னு கேக்க
மாட்டீங்களா? (நீங்க கேக்கலைன்னாலும் நான்
சொல்லுவேன்)ம்ம்ம்…..உடற்பயிற்ச்சி செய்யத்தான்!
No comments